ஒரு காலத்தில் சிவகார்த்திகேயன் மிகவும் வெகுளியாக இருப்பார். உதாரணமாக மூணு, எதிர்நீச்சல் போன்ற திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது விருது வழங்கும் விழாக்களில் அவர் வரும்பொழுது சிவகார்த்திகேயனின் வெகுளித்தனம் தெரியும். ஆனால் இன்று அந்த வெகுளியை அவர் மிஸ் யூஸ் பண்ணுகிற மாதிரியான உணர்வு வருகிறது. சமீபத்தில் நடந்த பராசக்தி படத்தின் பிரீ ரிலீஸ் ஈவென்ட் நிகழ்ச்சியில் தொகுப்பாளினி இந்த படத்திற்கு கண்டிப்பாக நீங்கள் வரவேண்டும் என்று சொல்லும் பொழுது அப்படி எல்லாம் சொல்லக்கூடாது, நேரம் இருந்தால் வாங்க என்று அவர் கூறும் பொழுது அந்த இடத்தில் நமக்கு, எங்கேயோ அவர் ஆட்டிட்யூட் காட்டுகிற மாதிரி தெரிகிறது.
இதைப் பற்றி வலைப்பேச்சு அந்தணன் கூறும் பொழுது கிட்டத்தட்ட கவின் கதை மாதிரி தான். கவின் ஒரு பேட்டியில் ரசிகர்களுக்கு நீங்கள் இந்த மாதிரி படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது .படிப்பில் கவனம் செலுத்துங்கள். படிப்புதான் முக்கியம். இப்படி அட்வைஸ் பண்ணினார். அது மாதிரி தான் இதையும் நாம் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. நம்ம ஒன்னு சொன்னோம்னா வெளியில் அதை வேறு ஒரு மாதிரியாக ட்ரோல் செய்வார்கள். அதற்காக சொல்ல வர வேண்டிய விஷயத்தை சொல்லாமல் இருக்க முடியுமா?
கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கிறார், ஐய்யயோ, நான் அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன். அப்படின்னு சொல்கிறார். யாராக இருந்தாலும் இந்த படத்தை வந்து பாருங்கள் அப்படித்தானே சொல்வார்கள்? ரசிகர்கள் பார்க்கிறார்கள் பார்க்கவில்லை. அது வேற விஷயம். ஒரு வேலையை செய்திருக்கிறீர்கள். அதை எல்லோரும் பார்க்க வேண்டும் என்று விரும்புவது தானே ஒரு மனிதனின் இயல்பு. அதை சொல்வதில் உங்களுக்கு என்ன தயக்கம்? அங்கேயும் ஒரு நல்ல பெயரை வாங்க வேண்டும் என்பதற்காக ஒரு பிட்டை போடுகிறார்.
ரவி மோகனைப் பற்றி கூட அவர் சொல்லும்போது இந்த படத்தில் நீங்க வில்லனாக நடிக்கிறீங்க. ஆனா எந்த இடத்திலேயும் நீங்க என்னோட படத்தில் வேலை செய்கிறீர்கள் என்ற உணர்வு இல்லாமல் என்னோட படத்துல நீங்க கௌரவமாக இருக்க வேண்டும் என்கிற வார்த்தையை பயன்படுத்துகிறார். இதை பார்க்கும் பொழுது இது என்னுடைய படம்தான் நீங்க நடிக்க தான் வந்து இருக்கீங்க. உங்கள நான் கௌரவமா வச்சிருக்கேன் என்பது மாதிரி சொல்கிற தொணியாக இருக்கிறது.
ஆரம்பத்தில் இது மூன்று ஹீரோ சப்ஜெக்ட். ஆனால் சிவகார்த்திகேயன் இப்படி சொல்லும் பொழுது அவருடைய படம் அப்படின்னு அதை பதிவு செய்கிறார். இதை பார்க்கும் பொழுது இந்த இடத்தில் ரஜினி உயர்ந்து நிற்கிறார். முரட்டுக்காளை படத்தில் ஜெய்சங்கர் படத்தில் வரும் பொழுது ரஜினி போட்ட முதல் கண்டிஷன், நான் அவரை ஒரு அடி அடிக்கிறேன் என்றால் அவர் திரும்பவும் என்னை ஒரு அடி அடிக்க வேண்டும்.
அவர் நெஞ்சில் நான் மிதிக்கிறேன் என்றால் அவரும் என்னுடைய நெஞ்சில் மிதிக்க வேண்டும் .எனக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவு முக்கியத்துவம் அவருக்கும் இருக்க வேண்டும் என்பதுதான். அந்த பண்பு எல்லாம் இப்பொழுது உள்ள நடிகர்களுக்கு கிடையவே கிடையாது. அதாவது ஒருவரை உயர்த்தி பேசுவதா நினைத்து மண்டைல கொட்டுறது இருக்குல? அதுதான் இது என அந்தணன் கூறியுள்ளார்
