ரசிகர்களால் தளபதி என்ன கொண்டாடப்படும் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் அப்பாவை போல நடிகராவார் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் இயக்குனராக களமிறங்கி எல்லோருக்கும் டிவிஸ்ட் கொடுத்திருக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சந்தீப் கிஷனை ஹீரோவாக வைத்து சிக்மா என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ஜேசன். இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.
ஜோசப் சஞ்சய் இதுவரை எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக வேலை செய்யவில்லை. சுயம்புவாக சினிமாவை கற்றுக்கொண்டு வந்திருக்கிறார். இந்நிலையில்தான் சிக்மாவின் டீசர் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த டீசர் விஜய் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.
நிலம், நீர், காற்று மற்றும் பணம் இவர்களின் மதிப்பு கூட ஏறிக்கொண்டே போகிறது. ஆனால் மனிதர்களும், மனித உறவுகளின் மதிப்பும் மாறாமல் இருக்கிறது என டீசரில் வசனம் வருகிறது. இதை பார்க்கும்போது ஒரு நல்ல கருத்தை அடிப்படையாக வைத்து படத்தை ஜேசன் சஞ்சய் உருவாக்கியிருப்பது புரிகிறது. தமனின் பின்னணி இசையும் சிறப்பாக இருக்கிறது.
ஜென்சி ரசிகர்களுக்கு பிடிக்கும்படியான காதல் மற்றும் ஆக்சன் காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருக்கிறது. இந்த படத்தில் வில்லனாக சம்பத் நடித்திருக்கிறார். மேலும் நடன இயக்குனர் ராஜ் சுந்தரமும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தைப் பார்க்கும்போது பிரச்சனைகளை பார்த்து ஒதுங்கிச் செல்லும் ஒரு சராசரி இளைஞனாக இல்லாமல் ஏதோ ஒன்று மாற்ற நினைக்கும் ஒரு இளைஞனின் கதாபாத்திரமாகவே சந்தீப் கிஷனின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருப்பது புரிகிறது.
எனவே கண்டிப்பாக சிக்மா திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும், ஜேசன் சஞ்சய் இயக்குனராகவும் வெற்றி பெறுவார் என கணிக்கப்படுகிறது. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
