விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் பிரம்மாண்டமாக மலேசியாவில் நடந்து முடிந்தது. அந்த இசை வெளியீட்டு விழாவிற்கு உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இருந்து ரசிகர்கள் திரண்ட வண்ணம் வந்திருந்தனர். இசை வெளியீட்டு விழா மட்டுமல்ல அது ஒரு தளபதி கச்சேரியாகவும் மாறியது. விஜய் நடித்த படங்களில் இருந்து ஒரு சில படங்களின் ஹிட் பாடல்களை பாடகர்கள் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
அதில் விஜயின் அம்மா சோபாவும் விஜய் நடித்த படத்திலிருந்து ஒரு பாடலை பாடினார். அது சிவகாசி படத்தில் விஜய் அம்மாவே பாடியது. இசை வெளியீட்டு விழாவில் பல சிறப்பம்சங்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்தது. விஜயின் அப்பா பேசி முடித்ததும் விஜய் அங்கிருந்து ஓடி வந்து அவரை கட்டிப்பிடித்து தன்னுடைய அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தியது ரசிகர்களிடம் ஒருவித உணர்வை ஏற்படுத்தியது.
அதைப்போல விஜய்க்கு இதுவரை டான்ஸ் சொல்லிக் கொடுத்த மாஸ்டர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு ட்ரிபியுட்டாக அவரை வந்து சந்தித்ததும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதோடு போக்கிரி பொங்கல் பாடலுக்கு பிரபுதேவா நடனம் ஆட ஒரே ஒரு ஸ்டெப் மட்டும் விஜய் ஆடி ரசிகர்களை மகிழ்வித்தார். இப்படி அந்த விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த விழாவிற்கு திரை பிரபலங்கள் பெரும்பாலும் வரவில்லை. அதற்கு பதிலாக சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் இந்த விழாவிற்கு ஆன மொத்த செலவு பற்றிய ஒரு தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. மலேசியாவில் நடந்த ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்துவதற்கு கிட்டத்தட்ட 18 கோடி செலவு ஆனதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான செலவை ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனமும் இந்த விழாவை ஏற்பாடு செய்த நிறுவனமும் சேர்ந்தே செலவு செய்திருப்பதாக தெரிகிறது.
ஆனால் போட்ட முதலீட்டை ஒரே நாளில் எடுத்து இருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஏனெனில் பல நாடுகளில் இருந்து இந்த விழாவை காண ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்திருப்பதை நம்மால் பார்க்க முடிந்தது. 80 ஆயிரம் பேர் உட்கார வேண்டிய அந்த ஸ்டேடியத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வரை வந்திருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இதில் நாசர் சொன்ன விஷயம் தான் மிகவும் ஹைலைட்டாக பார்க்கப்பட்டது.
நீங்கள் நடிப்பதை நிறுத்தக்கூடாது. திரும்பவும் நடிக்க வேண்டும் என்றெல்லாம் கூறி இருந்தார். நாசர் சொன்ன இந்த விஷயத்தை கேட்டு ரசிகர்கள் பலரும் கைதட்டி அதை வரவேற்றனர். அதனால் விஜய் இதைப்பற்றி கொஞ்சம் யோசிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் நெட்டிசங்கள் தங்களுடைய கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
