நேற்றிலிருந்து அஜித் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. கார் ரேஸில் பிஸியாக இருக்கும் அஜித் நேற்று தன் மகளுடன் கேரளாவில் இருக்கும் பகவதி அம்மன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றார். அவரை பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க முயன்றனர். சில பேருடன் செல்பி எடுத்துக்கொண்டு அவர்களுக்கு ஹார்ட் சிம்பலையும் தட்டிவிட்டு சென்றார் அஜித்.
தன் மகளை பத்திரமாக அவர் அழைத்துக் கொண்டு போகும் காட்சி அனைவரையும் ரசிக்க வைத்தது. ஏற்கனவே இதற்கு முன் தன் மனைவி மற்றும் மகனுடன் இதே கோயிலுக்கு சாமி கும்பிட்டு விட்டு சென்ற அஜித் நேற்று தன் மகளுடன் வந்து பகவதி அம்மனை தரிசனம் செய்துவிட்டு போனார். இந்த நிலையில் இன்று ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அவர் ஏற்கனவே ரைபிள் துப்பாக்கி சுடுதலில் கை தேர்ந்தவர்.
இன்று அந்த கிளப்பில் வகை வகையான துப்பாக்கிகளுடன் அஜித் துப்பாக்கி சுடும் வீடியோ வைரலாகி வருகின்றது. அவர் aim வைத்த குறியை அசால்ட்டாக சுட்டு வீழ்த்தினார். ஒரு பக்கம் நடிப்பு ஒரு பக்கம் ரேஸ் இன்னொரு பக்கம் குடும்பம் இன்னொரு பக்கம் ரைபிள் சுடுதல் என தன்னுடைய நேரத்தை தனக்கு பிடித்தமான விஷயங்களில் செலவிடுவதை அஜித் எப்பொழுதுமே விரும்புவார்.
அதைத்தான் இப்போது வரை அவர் பாலோ செய்து வருகிறார். பிப்ரவரி மாதத்திற்கு பிறகு அவர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் புதிய படத்தில் இணைய இருக்கிறார். அந்த படத்தின் பிரீ ப்ரோடக்ஷன் பணிகள் தான் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
அவர் நடிப்பில் கடைசியாக குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது. ரசிகர்களுக்கான படமாக அது அமைந்தது .மீண்டும் அதே கூட்டணி என்பதால் அஜித் ரசிகர்கள் படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
Courtesy to malaimalar
