நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து விட்டதால் அவரின் ஜனநாயகன் படத்திலும் நிறைய அரசியல் விளையாடி வருவதாக சொல்லப்படுகிறது. விஜய் கடந்த பல வருடங்களாகவே அரசியல்ரீதியான பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். அவரின் தலைவா, மெர்சல் போன்ற படங்களுக்கு பிரச்சனை கொடுத்தார்கள். இது போன்ற சம்பவங்கள்தான் அவரை அரசியலுக்கு வர தூண்டியதாக சொல்லப்படுகிறது. சரியாக திட்டமிட்டு தற்போது முழுநேர அரசியல்வாதியாக மாறியிருக்கிறார் விஜய்.
அவரின் ஜனநாயகன் திரைப்படம் வருகிற 9ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அடுத்த நாள் அதாவது ஜனவரி 10ம் தேதி சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் வெளியாகவுள்ளது. இதன் காரணமாக எல்லா தியேட்டர்களிலும் ஜனநாயகன் படத்தை போட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
சில தியேட்டர்களில் ஜனநாயகன் படம் இரண்டு காட்சிகளும், பராசக்தி இரண்டு காட்களும் திரையிடவுள்ளனர். இதன் காரணமாக ஜனநாயகன் படம் ஒரு வாரத்தில் எடுக்க வேண்டிய வசூலை எடுக்க இரண்டு வாரங்களாகும் என்கிறார்கள். இதற்கு பின்னர் அரசியல் காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் இந்த படத்தை வெளியிடுவது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் பிக்சர்ஸ். இந்த படத்தின் தயாரிப்பாளர் முதல்வர் ஸ்டாலினுக்கு நெருங்கிய உறவினர்.

ஜனநாயகனின் தமிழக வெளியீட்டு உரிமையை பலருக்கும் பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள். ஜனநாயகன் படம் தனியாகவே வரும்.. பராசக்தி 14ம் தேதி என்பதால் 5 நாளைக்கு ஜனநாயகன் படத்திற்கு வசூலை அள்ளிவிடலாம் என விநியோகஸ்தர்கள் கணக்கு போட்டிருந்தனர். ஆனால் பராசக்தி 10ம் தேதி ரிலீஸ் என அறிவித்திருக்கிறார்கள்.
எனவே ஜனநாயகன் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கிய விநியோகஸ்தர்கள் சமீபத்தில் ரகசிய மீட்டிங் போட்டு ‘ஜனநாயகன் சிங்கிளாக வரும் என்றுதான் இவ்வளவு விலை கொடுத்து வாங்கினோம். தற்போது அதோடு பராசக்தியும் வருகிறது.. எனவே ஜனநாயகன் படத்திற்கு நாம் கொடுத்து விலையை குறைக்க சொல்லுமாறு தயாரிப்பாளரிடம் பேசுவோம் என முடிவெடுத்திருக்கிறார்களாம். அகமாக விரைவில் அவர்கள் ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளரான கே.விஎன் புரடெக்ஷன் நிறுவனத்திடம் பேசுவார்கள் என தெரிகிறது.
