சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் பராசக்தி. ஜிவி பிரகாஷ் இசையில் இந்தப் படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸாக இருக்கின்றது. ரிலீஸுக்கு முன்பே பராசக்தி படம் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி வருகின்றது.
தணிக்கை குழு இந்தப் படத்தில் சில காட்சிகளை வெட்டும் படி கூறியது. ஆனால் படக்குழு இந்தப் படத்தை ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பியிருந்தது. இதற்கு இடையில் உதவி இயக்குனர் ராஜேந்திரன் பராசக்தி படத்தின் கதை தன்னுடைய செம்மொழி கதை என்றும் அதை திருடியே பராசக்தி படத்தை எடுத்திருக்கிறார்கள் என்றும் நீதிமன்றத்தை நாடினார்.
அதனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகுமா என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு மத்தியில் சென்னை உயர் நீதிமன்றம் இப்போது ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. ராஜேந்திரன் தன்னுடைய கதையை திருடிதான் பராசக்தி படத்தை எடுத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார். ஆனால் திருடியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தயாரிப்பு நிறுவனம் சொன்னதின் பேரில் பராசக்தி படத்தின் வெளியீட்டிற்கு தடை விதிக சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கு மற்றுமொரு புதிய பிரச்சினை வந்திருக்கிறது. சமீபத்தில் சிவாஜி கணேசன் சிவகார்த்திகேயனிடம் தீ பந்தத்தை கொடுக்கும் மாதிரியான ஒரு புகைப்படம் வைரலானது. அந்தப் புகைப்படத்தை வைத்து பராசக்தி படத்திற்கு புரோமோஷன் செய்கிறார்களா? சிவாஜியின் மகன் பிரபு அவருடைய மகன் விக்ரம் பிரபு இருக்கும் போதே சிவகார்த்திகேயனை தன்னுடைய அடுத்த வாரிசு என சிவாஜி காட்டுவது போல அந்த புகைப்படம் இருப்பதாகவும் சிவாஜி நலப்பேரவை அமைப்பு இதற்கு முற்றிலுமாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
ஒரு பக்கம் விஜய் கொடுத்த துப்பாக்கி இன்னொரு பக்கம் சிவாஜியின் கையில் இருந்து தீப்பந்தம் என சிவகார்த்திகேயன் பெரும் நெருக்கடியில் இருக்கிறார். இதற்கு இடையில் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 3 ஆம் தேதி நடக்கின்றது. அதனை ஜனவரி 4 ஆம் தேதி ஒளிபரப்பு செய்கிறார்கள். அதே தேதியில்தான் விஜயின் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்கிறார்கள். டிவியிலும் இரு படத்திற்கு இப்படி ஒரு மோதல் தொடங்கியிருக்கிறது.
