தமிழ் சினிமா ரசிகர்களால் தளபதி என கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். இவர் சினிமாவுக்கு நடிக்க வந்து 33 வருடங்கள் ஆகிவிட்டது. தற்போது அவர் அரசியலுக்கும் சென்றிருக்கிறார். ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் அவரின் கடைசி படமாக பார்க்கப்படுகிறது. ஒரு சிலரோ 2026 தேர்தல் ரிசல்ட்க்கு பின் விஜய் கண்டிப்பாக சினிமாவில் நடிக்க வருவார் எனவும் சொல்கிறார்கள். என்ன நடக்கும் என தெரியவில்லை.
சமீபத்தில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரமாண்டமாக நடந்தது. இந்த விழாவில் சுமார் ஒரு லட்சம் பேர் வரை கலந்து கொண்டனர். இதுவரை எந்த ஒரு சினிமா தொடர்பான நிகழ்ச்சிக்கும் இவ்வவளவு கூட்டம் கூடியது இல்லை. அதேபோல் ஜனநாயகன் டிரைலர் வீடியோ நாளை மதியம் 6:45க்கு வெளியாகவுள்ளது. திரைப்படம் வருகிற 9ம் தேதி உலகம் எங்கும் வெளியாகவிருக்கிறது.

ஜனநாயகன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஷா ‘ஒவ்வொரு முறையும் விஜய் சார் ஸ்பாட்டில் வந்து நிற்கும்போது எனக்கே ஒரு எனர்ஜி வந்துவிடும். இதற்கு முன்பு நான் அப்படி ஃபீல் செய்ததில்லை. இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்தது எனக்கு கடவுள் கொடுத்த பரிசாக பார்க்கிறேன்..
விஜய் சாரை சின்ன வயதில் இருந்தே நான் பார்த்து வருகிறேன். அவரின் மாஸ் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறது’ என்று பேசியிருக்கிறார். அவர் சொன்னதை விஜய் ரசிகர்கள் ட்விட்டர் போன்ற சமூக வளர்ந்த நிலையில் பகிர்ந்து வருகிறார்கள்.
