Home News Reviews Throwback Television Gallery Gossips

விஜய் அண்ணனுக்கு ஒரு சின்ன அட்வைஸ் – விஜயபிரபாகரன் சொன்ன ரகசியம்

Published on: January 9, 2026
விஜய் அண்ணனுக்கு ஒரு சின்ன அட்வைஸ் - விஜயபிரபாகரன் சொன்ன ரகசியம்
---Advertisement---

தமி சினிமவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் என்றால் அது விஜய் மட்டுமே. அவர்து ஓவ்வொரு படமும் ஒரு சாதனை படைப்பது வழக்கம். தற்போது ஜனநாயகன் படம் ரிலீசுக்கு தயாரகிவிட்டது. பொங்கலையொட்டி இன்று வெளியாக இருந்த படம் சென்சார் சர்டிபிகேட் பிரச்சனையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளுக்கு காரணம் விஜயின் அரசியல் பிரவேசம் என்று கூறப்படுகிறது. ஜனநாயகன் பட விவகாரத்தில் சில நடிகர்கள் மட்டுமே விஜய்க்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்துள்ளனர். அரசியலில் காங்கிரஸார் மட்டும் ஆதரவாக பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் தேமுதிக மாநில மாநாடு கடலூரில் இன்று நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், விஜய் அண்ணாவுக்கு ஒரு சிறிய அட்வைஸ், நான் அரசியலில் அவரைவிட சீனியர் என்று விஜய் அண்ணாவே கூறியுள்ளார்.அந்த உரிமையில் இந்த தம்பி ஒரு விசயம் கூறுகிறேன். எந்த காரணம் கொண்டும் காங்கிரஸாரை நம்ப வேண்டாம். அவர்கள் தங்கள் பேரத்தை பேசுவதற்காக உங்களது படத்திற்கு ஆதரவாக பேசுகின்றனர். விருதுநகரில் அவர்கள் என்ன செய்தார்கள் என்று எனக்கு தெரியும். அவர்கள் வலையில் சிக்கி கொள்ளாதீர்கள் என்று கூறினார்.