பிக்பாஸ் வீட்டில் இருந்து 18 லட்சம் மதிப்புள்ள பணப்பெட்டியை எடுத்து மற்ற போட்டியாளர்களுக்கு அல்வா கொடுத்தார் கானா வினோத். தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4 ஃபைனலிஸ்ட் போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். இவர்களுடன் கானா வினோத்தும் இருக்க வேண்டியது. ஒரு வேளை பணப்பெட்டியை எடுக்காவிட்டால் இந்த சீசனில் டைட்டிலை தட்டி செல்லும் வாய்ப்பு அவரை தேடி வந்திருக்கும்.
இருந்தாலும் ஒரு லட்சம் கிடைத்தாலும் அது கோடிக்கு சமம் என நினைத்து 18 லட்சம் பணப்பெட்டியை தூக்கிக் கொண்டு வந்துவிட்டார். அவருக்கு முன் அரோராதான் அந்த பணப்பெட்டியை எடுக்கும் முயற்சியில் இருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக கானா வினோத் வந்து அந்த பெட்டியை தூக்கியது அனைவருக்கும் அதிர்ச்சி. இன்னும் 4 போட்டியாளர்கள் இறுதி போட்டிக்குள் இருக்கின்றனர்.
வரும் வாரத்தில் யார் அந்த டைட்டிலை தூக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நிறைய பேர் திவ்யா பெயரை பரிந்துரை செய்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்து எல்லா விஷயங்களில் திவ்யாவின் ஈடுபாடு என்பது பெரியளவில் இருந்திருக்கிறது. அதே நேரம் எல்லா போட்டியாளர்களின் துக்கம் மகிழ்ச்சி இவைகளில் உறுதுணையாகவும் இருந்திருக்கிறார்.
வெளியே பார்க்கும் போதுதான் டெரர் பீஸ். ஆனால் பழகினால் திவ்யா குழந்தை மாதிரி என சமீபத்தில் கூட அரோரா கூறியிருந்தார். இந்த நிலையில் கானா வினோத்துக்கு வெளியே மக்கள் ஆதரவு பெரியளவில் இருப்பதை பார்க்க முடிகிறது. அவருடைய எதார்த்தமான பேச்சு, கவுண்டர் என அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வரும் போது அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.
காரில் வரும் போது நின்று கொண்டே வந்த வினோத்தும் ரசிகர்கள் மாலைகள் அணிவித்து மேளங்கள் அடித்து உற்சாகமாக வரவேற்றனர். இதை திரைவிமர்சகரான ப்ளூசட்டை மாறன் நக்கலடித்திருக்கிறார். ஒலிம்பிக்கில் தங்க மெடல் வாங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்த கானாவினோத்துக்கு மக்கள் உற்சாக வரவேற்பு என நக்கலடித்து பதிவிட்டிருக்கிறார்.

