நல்லவேளை பராசக்தி படத்தை நமக்கு கொடுக்கல!.. சந்தோஷத்தில் தியேட்டர் அதிபர்கள்…

விஜயின் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதியும் பராசக்தி திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதியும் ரிலீஸ் ஆன அறிவித்தார்கள். இது விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி சிவகார்த்திகேயனை திட்ட துவங்கினார்கள். அதோடு பராசக்தி படத்தை வெளியிடுவது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் பிக்சர்ஸ்…

parasakthi

விஜயின் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதியும் பராசக்தி திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதியும் ரிலீஸ் ஆன அறிவித்தார்கள். இது விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி சிவகார்த்திகேயனை திட்ட துவங்கினார்கள். அதோடு பராசக்தி படத்தை வெளியிடுவது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் பிக்சர்ஸ் என்பதால் அவர்களின் கோபம் திமுக பக்கமும் திரும்பியது. விஜய் திமுகவை விமர்சித்து பேசிவருவதால் வேண்டுமென்றே ஜனநாயகன் படத்தின் வசூல் பாதிக்க வேண்டும் என்பதற்காகவே அந்த படத்திற்கு போட்டியாக பராசக்தியை வெளியிடுகிறார்கள் என விஜய் ரசிகர்கள் நம்பினார்கள்.

ஆனால் இது வியாபாரம் காரணமாக தயாரிப்பாளர் எடுத்த முடிவு என்ன சிவகார்த்திகேயன் விளக்கமளித்தும் விஜய் ரசிகர்கள் கேட்கவில்லை. சமூகவலைத்தளங்களில் சிவகார்த்திகேயனை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். மேலும் விஜயா/ சிவகார்த்திகேயனா? என பார்க்கும்போது விஜய்தான் எனக்கு யோசித்த சில தியேட்டர் அதிபர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ‘நாங்கள் ஜனநாயகன் படத்தையே எங்கள் தியேட்டரில் திரையிட திட்டமிட்டிருக்கிறோம்.. பராசக்தி படம் வேண்டாம்’ என சொல்லிவிட்டார்கள். இது ரெட்ஜெண்ட் தரப்பினருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால், சென்சார் பிரச்சினையில் சிக்கியதால் ஜனநாயகன் படம் ரிலீஸாகவில்லை. எனவே பராசக்தி வேண்டாம் என சொன்ன சில விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் ரெட்ஜெயண்ட் நிறுவனத்தை தொடர்பு கொண்டு ‘பராசக்தி படத்தை கொடுங்கள்’ என கேட்டால் ‘உங்களுக்கு படம் கொடுக்க முடியாது’ என மறுத்து விட்டதாம் ரெட் ஜெயண்ட் தரப்பு.

எனவே வேறு வழியின்றி விக்ரம் பிரபு இயக்கத்தில் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்ற்ற சிறை படத்தை திரையிட துவங்கி விட்டார்களாம். தற்போது தமிழ்நாட்டில் பல தியேட்டர்களிலும் சிறை படம் ஓடிக் கொண்டிருக்கிறது.. இப்போதும் இந்த படம் ஓரளவுக்கு நல்ல வசூலையும் பெற்று வருகிறதாம்.. ஒருபக்கம், பராசக்தி படத்திற்கும் பெரிய வசூல் இல்லை. ஆனால், சிறை படத்திற்கு இப்போதும் வசூல் இருக்கிறது. ஒருவகையில் சிறை படத்திற்கு ஜனநாயகன் வாழ்வு கொடுத்தது மாதிரி ஆகிவிட்டது.