ரஜினி மற்றும் கமல் கடந்த காலங்களில் பல படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். இப்போது இருவரையும் ஒரே படத்தில் இணைக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. இவர்கள் இருவரின் சினிமா பயணம் என்பது மிகவும் எளிமையான பல சவால்கள் நிறைந்த ஒன்றாக இருந்தது. களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் கமல்.
அந்த படத்தில் அவருக்கு தேசிய விருது கிடைத்தது. சிறு வயதில் இருந்தே நடிப்பு நடனம் இசை என பல கலைகளில் ஆர்வம் கொண்டவராக கமல் விளங்கினார். அதன் பிறகு அபூர்வராகங்கள் மூன்று முடிச்சு 16 வயதினிலே போன்ற படங்களின் மூலம் கதாநாயகனாக நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். அவருடைய கதை தேர்வு நடிப்பின் ஆழம் என ஒரு தனித்துவமான பாதையை உருவாக்கிக் கொண்டார்.
ரஜினிகாந்தின் சினிமா பயணம் என்பது முழுக்க முழுக்க அவருடைய உழைப்பும் அதிர்ஷ்டமும் நிறைந்ததாகவே பார்க்கப்பட்டது. கமல்ஹாசன் நடித்த அதே படத்தில் அதாவது அபூர்வ ராகங்கள் படத்தில் வில்லன் வேடத்தில் அறிமுகமானார் ரஜினி. மூன்று முடிச்சு 16 வயதினிலே போன்ற படங்களிலும் ரஜினி நடித்தார். இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் இணைந்து நடித்திருக்கின்றனர்.
இந்த நிலையில் ரஜினியை வைத்து பெட் கட்டி தான் தோற்றுப் போனதாக பிரபல தயாரிப்பாளர் எல் சுரேஷ் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ஸ்ரீதர் இயக்கத்தில் ரஜினியும் கமலும் இணைந்து நடித்த திரைப்படம் இளமை ஊஞ்சலாடுகிறது. அந்த படத்தில் ஸ்ரீதர் ரஜினியின் நடிப்பை பார்த்து இன்னும் இரண்டு வருடத்தில் கமலை விட ரஜினி மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை பெறுவார். அவருக்குதான் மார்க்கெட் உயர்ந்து கொண்டே போகும் என கூறினாராம்.
ஆனால் சுரேஷ் ரஜினியின் நிறம் அவருடைய அழகு இதையெல்லாம் பார்த்து அந்த அளவுக்கு எல்லாம் ரஜினி வரமாட்டார், வேண்டுமென்றால் பெட் கட்டிக் கொள்ளலாம் என கூறி சவால் விடுத்திருக்கிறார். ஆனால் இயக்குனர் ஸ்ரீதர் சொன்னதைப்போல இரண்டு வருடங்களில் ரஜினியின் வளர்ச்சி என்பது யாராலும் நினைத்து பார்க்க முடியாத அளவில் இருந்ததாம். அதன் பிறகு ஒரு சமயம் ஸ்ரீதரை பார்த்த சுரேஷ் நான் பெட்டில் தோற்றுவிட்டேன் எனக்கூறி நூறு ரூபாயை அவரிடம் கொடுத்ததாக சமீபத்திய ஒரு பேட்டியில் சுரேஷ் கூறியுள்ளார்.