லோகேஷ் – அல்லு அர்ஜூன் பட கதை இதுதானா?!.. ஹாலிவுட் ரேஞ்சில இருக்கே!…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, விக்ரம், மாஸ்டர் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது. அதேநேரம் விஜயை வைத்து அவர் இயக்கிய லியோ, ரஜினியை வைத்து இயக்கிய கூலி ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.…

aa27

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, விக்ரம், மாஸ்டர் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது. அதேநேரம் விஜயை வைத்து அவர் இயக்கிய லியோ, ரஜினியை வைத்து இயக்கிய கூலி ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. எனவேதான் ரஜினி கமலுடன் தான் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பை லோகேஷுக்கு கொடுக்கவில்லை என அப்போதே செய்திகள் வெளியானது.

ஒருபக்கம் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார் லோகேஷ் கனகராஜ். எனவே அடுத்து அவர் யாரை வைத்து படம் இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவனது. ரஜினி, கமல் இணையும் பட வாய்ப்பு கையை விட்டுப் போனதால் கைதி 2 படத்தை லோகேஷ் இயக்கப்போகிறார் என செய்திகள் வெளியானது. ஆனால் அவரோ தெலுங்கு சினிமா நடிகர் புஷ்பா பட புகழ் அல்லு அர்ஜுனை சந்தித்து ஒரு கதையை சொல்லி ஓகே செய்திருக்கிறார்.

அல்லு அர்ஜுன் தற்போது அட்லீ இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹாலிவுட் கலைஞர்களும் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கப் போகும் படத்தின் கதை இதுதான் ஒரு தகவல் கசிந்திருக்கிறது. இது லோகேஷ் கனகராஜ் எப்போதே எழுதிய இரும்புக்கை மாயாவி கதைதான் என்றாலும் தற்போது அதில் பல மாற்றங்களை அவர் செய்திருக்கிறார்.

1962ம் வருடம் வெளியான The Steel Claw ன்கிற ஆங்கில நாவலை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதையை லோகேஷ் உருவாக்கியிஇருக்கிறாராம். விபத்தில் கையை இழந்து செயற்கை கை பொருத்திருக்கும் ஹீரோ ஒரு மின்சார விபத்திற்கு பின் தனது உடலை மறைய வைக்கும் சக்தியை பெறுகிறான். அதை அவன் எப்படி பயன்படுத்தினான் என்பதுதான் படத்தின் கதை என்கிறார்கள். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கவுள்ளதால் படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு உருவாகும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.