Home News Reviews Throwback Television Gallery Gossips

அல்லு அர்ஜூன் படத்துக்கு பலகோடி சம்பளம்!.. கைதி 2-வை கழட்டிவிட்ட லோகேஷ்!.. காசுதான் எல்லாம்!..

Published on: January 13, 2026
allu arjun lokesh
---Advertisement---

மாநகரம், கைதி, விக்ரம், மாஸ்டர் படங்கள் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டாரத்தை உருவாக்கியவர் லோகேஷ் கனகராஜ். அதற்குக் காரணம் அவர் கையாளும் திரை மொழி.. ஆக்சன் திரில்லர் படங்கள்தான் இவரின் ஸ்டைல். இவரின் படங்களை எல்.சி.யூ என ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

ஆனால் லியோ, கூலி இரண்டு படங்களும் ரசிகர்களை ஏமாற்றியது.. எனவே இவர் மீது இருந்த இமேஜும் கொஞ்சம் குறைந்து போனது. அதோடு கூலிப்படை ரிசல்ட்டால் ரஜினி கமல் இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்தை இயக்கம் வாய்ப்பும் லோகேஷுக்கு கிடைக்கவில்லை. ஒருபக்கம், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் ஹீரோவாக நடிக்க தொடங்கினார் லோகேஷ்.

ஒருபக்கம் லோகேஷ் கனகராஜ் அடுத்து எந்த நடிகரை வைத்து படம் இயக்குவார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ரஜினி பட வாய்ப்பு கிடைக்காமல் போனதால் கைதி 2 படத்தை லோகேஷ் கையில் எடுப்பார் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அல்லு அர்ஜுனுக்கு கதை சொல்லி சம்மதம் வாங்கியிருக்கிறார் லோகேஷ். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் எப்போதே எழுதிய இரும்புக்கை மாயாவி கதையை தற்போது ட்ரெண்டுக்கு ஏற்றார் மாற்றி திரைக்கதை அமைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் கைதி படத்தை இயக்கிய போது லட்சங்களில்தான் சம்பளம் வாங்கினார். ஆனால், கூலி படத்திற்கு 50 கோடி சம்பளமாக பெற்றார் லோகேஷ்.,

கைதி 2-வுக்கு மிகவும் குறைவான சம்பளத்தை தயாரிப்பாளர் பேச அதை விட்டுவிட்டு அல்லு அர்ஜுன் படத்திற்கு வந்திருக்கிறார் லோகேஷ் என்கிறார்கள். அதற்கு காரணம் அல்லு அர்ஜுன் படத்திற்கு 75 கோடி சம்பளம் பேசியிருக்கிறாராம் லோகேஷ். அல்லு அர்ஜுன் தற்போது அட்லி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் இந்த வருடம் மே மாதம் லோகேஷ் கனகராஜ் படத்தின் ஷூட்டிங் துவங்கும் என்கிறார்கள்.