மிஷ்கின் இயக்கிய முகமூடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் பூஜா ஹெக்டே. மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவர் இவர்.
தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். தெலுங்கில் பல வெற்றி படங்களிலும் நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறினார். மகேஷ் பாபு. பிரபாஸ். ஜூனியர் என்டிஆர் போன்ற நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.
தமிழில் விஜய் நடித்த பீஸ்ட் படம் மூலம் நடிக்க தொடங்கினார் அதன்பின் லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி படத்தில் மோனிகா பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்நிலையில்தன் ஒரு பகீர் தகவலை பூஜா ஹெக்டே ஊடகம் ஒன்றில் கூறியிருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேன் இண்டியா படத்தில் பணி புரிந்த போது ஒரு நட்சத்திர ஹீரோ அனுமதி இன்றி கேரவனில் நுழைந்து எல்லை மீறி என்னை தொட முயன்றார். அவரது கன்னத்தில் அறைந்தேன்.. அந்த சம்பத்திற்கு பின் அவர் என்னுடன் நடிக்கவே இல்லை என்று சொல்லியிருக்கிறார். இதையடுத்து அந்த நடிகர் யார் என என்கிற தேடலில் ரசிகர்கள் இறங்கி இருக்கிறார்கள்.




