சினிமாவில் நயன்தாராவை விட திரிஷா சீனியர். துவக்கத்தில் மாடல் அழகியாக இருந்து அதன்பின் சினிமாவில் நுழைந்தவர் திரிஷா. துவக்கத்தில் துணை நடிகையாக சில படங்களில் நடித்துவிட்டு லேசா லேசா படம் மூலம் கதாநாயகியாக நடிக்க துவங்கியவர் இவர்.

நயன்தாராவோ ஐயா திரைப்படத்தின் மூலம் நடிகையாக மாறியவர். ஒரு கட்டத்தில் நயன் – திரிஷா இருவருமே வளர்ந்து இருவரும் சம போட்டியாளராக மாறினார்கள். ஆனால் நயன்தாரா சற்று முன்னேறி நம்பர் ஒன் இடத்தை பிடித்தார்.

அவரை ரசிகர்கள் லேடி சூப்பர்ஸ்டார் என அழைத்தார்கள். திரிஷா ஒரு கோடி, இரண்டு கோடி சம்பளம் வாங்கிய போது நயன்தாராவின் சம்பளம் 10 கோடியாக இருந்தது. முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் படங்கள் வாய்ப்பு எல்லாம் நயன்தாராவிற்கே போனது.

அதேநேரம் நயன்தாராவின் மார்க்கெட் கொஞ்சம் இறங்கிய போது பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் திரிஷா. அதற்கு முன் விஜய் அஜித் படங்களை நடிக்க தொடங்கினார். விஜயுடன் லியோ, அஜித்துடன் விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்தார் திரிஷா.

கடந்த சில வருடங்களாகவே நயன்தாராவுக்கு பெரிய மார்க்கெட் இல்லை. அவரின் படங்களும் வெளியாவதில்லை. இந்நிலையில்தான் கடலில் ஒரு கப்பலில் திரிஷாவும் நயன்தாராவும் இணைந்து ஜாலி பண்ணும் புகைப்படங்களை இருவருமே தங்களின் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.





