ஜீவாவுக்கு கடந்த பல வருடங்களாக வெற்றி படங்கள் அமையவில்லை. இந்நிலையில்தான் கடந்த 15ம் தேதி அவரின் நடிப்பில் தலைவர் தம்பி தலைமையில் என்கிற படம் வெளியானது. இந்த படத்தை நிதிஷ் சகாதேவ் என்பவர் இயக்கியிருந்தார்.
ஒரு கிராமத்தில் ஒரு திருமண வீட்டின் அருகே ஒரு மரணம் ஏற்பட அங்கே பிரச்சனை வருகிறது. அதை தீர்ப்பதற்கு அரசியலில் இருக்கும் ஜீவா அங்கே வருகிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இந்த கதைக்கு சுவாரஸ்யமான திரைக்கதையை அமைத்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்கள்.
எனவே இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. துவக்கத்தில் மிகவும் குறைவான தியேட்டர்களில் வெளியான இந்த படத்திற்கு தற்போது தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் இந்த படத்திற்கு முன்பு வெளியான பராசக்தி, வா வாத்தியார் போன்ற படங்கள் ரசிகர்களை கவரவில்லை.
எனவே பொங்கல் ரிலீஸில் ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படம் ஒரு சூப்பர் ஹிட் படமாக மாறியிருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தில் கரூர் சம்பவத்தின்போது கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பேசிய ‘படிச்சு படிச்சு சொன்னேனடா கண்டிஷன்ஸ் ஃபாலோ பண்ணுங்கன்னு என்கிற வசனத்தையும் ஜீவா பேசிய பேசியதும் சர்ச்சையானது.
இந்நிலையில் படம் வெளியாகி 5 நாட்கள் ஆன நிலையில் இந்த திரைப்படம் 16 கோடி வசூலை தாண்டியிருக்கிறது. நான்கு நாட்களில் இந்த படம் 14.85 கோடி வசூல் செய்திருந்த நிலையில் நேற்று ஒரு நாளில் 1.60 கோடி வசூல் செய்திருக்கிறது. எனவே இந்த படத்தின் மொத்த வசூல் 16.45 கோடியாக உயர்ந்திருக்கிறது.




