தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ஷங்கர் தான். ஆனால் இப்போது அவரை மிஞ்சிய பல இயக்குனர்கள் வந்துவிட்டார்கள். ஜென்டில்மேன், முதல்வன், இந்தியன் என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து தமிழக மக்களின் பேராதரவோடு சினிமா துறையில் பயணித்து வந்தார் ஷங்கர். படத்தை விட அந்தப் படத்தில் இருக்கும் பாடலுக்குத்தான் ஷங்கர் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்.
கடைசியான கேம் சேஞ்சர் படத்தில் கூட ஒரு பாடலுக்கு கோடிக்கணக்கில் செலவானதாக கூறப்பட்டது. அந்தளவுக்கு பிரம்மாண்ட திங்கிங் கொண்டவர் ஷங்கர்.ஆனால் தெலுங்கில் பிரசாந்த் நீல், ராஜமவுலி போன்றோர் வந்த பிறகு ஷங்கரின் மவுசு குறைந்து போனதாகவே பார்க்கப்படுகிறது. கடைசியாக தமிழில் இந்தியன் 2 படத்தை எடுத்தார்.
அந்தப் படம் பெரிய அளவில் நஷ்டத்தை ஈட்டிக் கொடுத்தது.அதன் பிறகு ஷங்கர் எந்தப் படமும் எடுத்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் பிரபல டான்ஸ் மாஸ்டர் கல்யாண் ஷங்கர் குறித்து ஒரு தகவலை கூறியிருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் அந்நியன். அந்தப் படமும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட படம்தான்.
அதி அண்டங்காக்கா கொண்டக்காரி என்ற பாடல் வரும். மிகவும் கலர்ஃபுல்லான பாடல். எங்கு பார்த்தாலும் பெயிண்டிங், பஸ்ஸூக்கு பெயிண்டிங், ரயிலுக்கு பெயிண்டிங் என அட்டகாசப்படுத்தியிருப்பார் ஷங்கர். இந்த பாடலுக்கு நடனம் அமைத்துக் கொடுத்தவர் கல்யாண் மாஸ்டர்தானாம். ஷங்கர் கல்யான் மாஸ்டரை அழைத்து எல்லா ஏற்பாடுகளும் செய்திருக்கிறேன். எனக்கு பக்காவா வேணும் என சொல்லியிருக்கிறார்.

ஒரு ஐந்து நாள்கள் கழித்து சார் பாடலை முடிச்சிட்டேன் என கல்யாண் கூறியிருக்கிறார். அதற்கு ஷங்கர் ‘யோவ் என்னுடைய கெரியரில் ஒரு பாடலை படமாக்க கிட்டத்தட்ட15 நாள்களுக்கு மேலாக எடுப்பேன். நீ ஐந்து நாளிலேயே முடிச்சுட்டேனு சொல்ற.. இது வொர்க் அவுட் ஆகுமா’ என்று கேட்டிருக்கிறார். வரும் சார் என சொன்னாராம் கல்யாண். சொன்னதை போல் அந்தப் பாடல் பட்டி தொட்டியெல்லாம் ரீச் ஆனது. என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடலாகவும் மாறியது என ஷங்கரே கல்யாணிடம் கூறியிருக்கிறாராம்.




