2 நாளில் படம் காலி!.. 100 கோடி வசூலா?!.. பராசக்தி தயாரிப்பாளரை கலாய்க்கும் விஜய் ஃபேன்ஸ்!…

Published on: January 20, 2026
parasakthi
---Advertisement---

ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் எனவும், பராசக்தி ஜனவரி 14ம் தேதியும் வெளியாகும் என அறிவித்திருந்தனர். ஆனால், திடீரென பராசக்தி படம் ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. பொங்கல் விடுமுறை வருவதல் வசூலை எடுக்கவேண்டும் என்பதற்காகவே தயாரிப்பாளர் இந்த முடிவை எடுத்ததாக சிவகார்த்திகேயன் சொன்னார்.

ஆனால், விஜய் ரசிகர்களுக்கு இது பிடிக்கவில்லை. ‘எங்க தளபதியுடன் மோதுமளவுக்கு உனக்கு தைரியமா?’ என சமூகவலைத்தளங்களில் அவரை திட்ட துவங்கினர். மேலும் ‘ஜனநாயகன் விஜயின் கடைசிப்படம். எதற்கு அந்த படத்தோடு நீ போட்டி போடுகிறாய்?’ என மோசமக விமர்சித்தார்கள்.

ஒருபக்கம் சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் ஜனநாயகன் படம் வெளியாகவில்லை. இதனால், விஜய் ரசிகர்களின் மொத்த கோபமும் பராசக்தி படம் மீதும், சிவகார்த்திகேயன் மீதும் திரும்பியது. பராசக்தி முதல் காட்சி வெளியாவதற்கு முன்பே அப்படம் நன்றாக இல்லை என்பது போல பொய்யான விமர்சனங்களை பரப்பினார்கள். ஒருபக்கம், பராசக்திக்கு நெகட்டிவ்வான விமர்சனங்கள் வந்தால் படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. 2வது நாளிலேயே பல தியேட்டர்களில் காத்துவாங்கியதாக சொல்லப்பட்டது.

ஆனால், 2 நாட்களில் உலகம் முழுவதும் 50 கோடி வசூல் என தயாரிப்பாளர் அறிவித்தார். அதை விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்தார்கள். அதன்பின் ஒரு வாரம் படத்தின் வசூல் பற்றி தயாரிப்பாளர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஒருபக்கம் இந்தியாவில் இப்படம் 49 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சில இணையதளங்கள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில்தான், பராசக்தி திரைப்படம் இதுவரை 100 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் இப்போது அறிவித்திருக்கிறது. ஆனால், இதையும் விஜய் ரசிகர்கள் நம்பவில்லை. இரண்டு நாளில் படம் படுத்துவிட்டது.. அப்படியிருக்க எப்படி 100 கோடி வசூல் வந்தது என அவர்கள் நக்கலடித்து வருகிறார்கள்.