பொங்கல் போட்டி ஓவர்: இந்த வாரம் திரையரங்குகளில் மோதும் புதிய படங்கள்!

Published on: January 20, 2026
இந்த வாரம் திரையரங்குகளில் மோதும் புதிய படங்கள்
---Advertisement---

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பராசக்தி, வா வாத்தியார் மற்றும் தலைவர் தம்பி தலைமையில் ஆகிய படங்கள் வெளியாகின. இதி வா வாத்தியார் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சுமார் ரகமே. மிகுந்த எதிர்பார்ப்பில் வந்த பராசக்தியும் ரசிர்களை கவரவில்லை. ஆனால் யாரும் எதிர்பார்க்காமல் வெளிவந்த தலைவர் தம்பி தலைமையில் படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

பொங்க்ல் கொண்டாடத்தை அடுத்து இந்தவாரம் அதாவது 23-ம் தேதி சில படங்கள் வெளிவருகின்றன.

திரௌபதி 2 : இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி மீண்டும் நடித்துள்ள இத்திரைப்படம் வரும் 23ம் தேதி வெளியாகிறது. முதல் பாகம் வெற்றியை தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2ம் பாகம் வெளியாகிறது. இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்

மாயபிம்பம் : செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் கே.ஜே சுரேந்தர் தயாரித்து இயக்கியிருக்கும் படம் மாயபிம்பம். முதுமுகங்களான ஜானகி மற்றும் ஆகாஷ் நடித்துள்ள இத்திரைப்படம் ஒரு குடும்ப பின்னணியுடன் கூடிய த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜாக்கி (Jockey): யுவன் கிருஷ்ணா, அம்மு அபிராமி நடித்துள்ள இந்தப் படம் மதுரையில் நடக்கும் பாரம்பரிய விளையாட்டான கிடா சண்டையை மையமாக கொண்டுள்ளது. பிகே7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் டாக்டர் பிரகபல் இப்படத்தை இயக்கியுள்ளார்.

சாத்த பச்ச (Chatha Pacha): மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் வெளியாகும் இந்தப் படம் ஒரு கேங்க்ஸ்டர் த்ரில்லராக உருவாகியுள்ளது. இப்படம் ஜனவரி 22ம் தேதி வெளியாகிறது.