mohang

திரைப்படத்துறையில் சாதி தொடர்பான திரைப்படங்களை பல இயக்குனர்கள் எடுத்து வருகிறார்கள். அதில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒன்று சாதியை எதிர்த்து மனிதநேயமே முக்கியம்.. மனிதர்கள் எல்லோரும் ஒரே சமம் என்கிற கருத்தை அடிப்படையாக வைத்து படம் இயக்குபவர்கள்.. மற்றொன்று தான் சார்ந்த சாதியி தூக்கி பிடித்து படம் எடுக்கும் இயக்குனர்கள்.

மாரி செல்வராஜ், பா.ரஞ்சித், வெற்றிமாறன் போன்ற இயக்குனர்கள் சாதியால் தாழ்த்தப்படவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தங்களின் திரைப்படங்களில் பிரதிபலித்து வருகிறார்கள். அதேநேரம் மோகன்.ஜி போன்ற இயக்குனர்கள் காழ்ப்புணர்ச்சியுடன் ஒரு குறிப்பிட்ட சாதியை மோசமாக சித்தரித்து தங்களது திரைப்படங்களில் காட்டி வருகிறார்கள்.

இந்நிலையில்தான், இயக்குனர் மோகன்.ஜி. சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘உண்மையிலேயே ஜாதி இருக்கான்னு கேட்டா இருக்கு.. வெற்றிமாறன் சார் கூட இதைத்தான் சொன்னாரு.. ஜாதி இருக்கு.. ஆனா எனக்கு வேணாம்னு சொல்லிட்டாரு.. அவரு ஜெயிச்சுட்டாரு.. அதனால அவருக்கு தேவைப்படல.. ஆனால் அடித்தட்டில் இருக்கும் மக்கள் மேலே ஏறி வர இட ஒதுக்கீடு தேவைப்படுது.. இதைத்தான் நானும் சொன்னேன்.. என்னை திட்றாங்க.. ஆனா வெற்றிமாறன் சார் சொன்னா பாராட்டுறாங்க.. இங்கு யாரு சொல்றாங்க அப்படிங்கிறதுதான் முக்கியம்.. அவ்வளவுதான் வித்தியாசம்’ என்று பேசியிருக்கிறார்.

மோகன்.ஜி இயக்கத்தில் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ள திரௌபதி 2 திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது குறிப்பிடத்தக்கது.