Connect with us

எனக்கு No டென்ஷன்!.. தவெக விழாவில் செம குத்து போட்ட விஜய்!… வைரல் வீடியோ…

latest news

எனக்கு No டென்ஷன்!.. தவெக விழாவில் செம குத்து போட்ட விஜய்!… வைரல் வீடியோ…

நடிகராக இருந்த விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார்.. தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அந்த கட்சியின் தலைவராக செயல்பட்டு வருகிறார்..
ஒருபக்கம் அஜித் அரசியல்வாதியான பின்னரும் அவர் அரசியல் செய்யவில்லை.. செய்தியாளர்களை சந்திப்பதில்லை.. முக்கியமான பிரச்சனைகள் பற்றி பேசுவதில்லை.. அவரின் ஜனநாயகன் படம் பிரச்சனை குறித்து கூட அவர் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.. என்றெல்லாம் அவரை பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்..

ஒருபக்கம் விஜய்க்கு கூட்டம் கூடுவதாலேயே அதுவெல்லாம் வாக்காக மாறும் என்று நம்ப முடியாது.. ஒரே தேர்தலில் விஜய் முதல்வராக மாற வேண்டும் என நினைக்கிறார்.. அதுவெல்லாம் நடக்காது.. என்றெல்லாம் அதிமுக மற்றும் திமுகவினர் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.. இந்நிலையில்தான் தமிழக வெற்றி கழகம் துவங்கி 3 வருடங்கள் முடிந்து விட்டதை கொண்டாடும் வகையில் பனையூர் அலுவலகத்தில் இன்று விழா நடந்து வருகிறது.. அந்த விழாவில் ஒரு பாடகருடன் இணைந்து விஜய் நடனமாடினார்.. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..

கூட்டணிக்கு வராதது, சிபிஐ விசாரணை, ஜனநாயகன் படத்திற்கான சிக்கல் என விஜய் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்பட்டது.. ஆனால் அதை அதுவெல்லாம் எனக்கில்லை.. நான் ரிலாக்ஸாகத்தான் இருக்கிறேன் என அவர் காட்டியிருக்கிறார்.

To Top