Connect with us

Simbu: சிம்பு அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாகும் படத்தின் தலைப்பு! அப்டேட் கொடுத்த இயக்குனர்

latest news

Simbu: சிம்பு அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாகும் படத்தின் தலைப்பு! அப்டேட் கொடுத்த இயக்குனர்

இன்று சிம்புவின் பிறந்தநாள் என்பதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகமாக பிறந்த நாள் கொண்டாட்டத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் அவருடைய பிறந்தநாளின் போது அவர் நடித்த சிலம்பாட்டம் திரைப்படம் இன்று ரீ ரிலீஸ் ஆகின்றது. கிட்டத்தட்ட 18 வருடங்கள் கழித்து இந்த திரைப்படம் அவருடைய பிறந்த நாளான இன்று ரீ ரிலீஸ் ஆகின்றது. அதற்கான துவக்க விழாவை சிம்புவின் தந்தை டி ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

அப்போது சிம்புவை பற்றி அவர் உருக்கமாக பேசியிருந்தார். தற்போது சிம்பு வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏனெனில் வெற்றிமாறன் தொடர்ந்து ஹிட் படங்களையே கொடுத்து வருகிறார். அதோடு நாவல் சார்ந்த கதைகளை படமாக எடுத்து மக்களிடம் அமோக வரவேற்பையும் பெற்று வருகிறார்.

தனுஷுக்கு தொடர் வெற்றிகளை கொடுத்து தனுஷை ஒரு ஆக்சன் ஹீரோவாக மக்களிடத்தில் பிரதிபலித்ததில் வெற்றிமாறனுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கின்றது. அதேபோல் சிம்புவுக்கும் இந்த அரசன் திரைப்படம் ஒரு மகத்தான திரைப்படமாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அரசன் திரைப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்து சிம்புவின் லைன் அப்பில் படங்கள் இருக்கின்றன.

குறிப்பாக அரசன் திரைப்படத்திற்குப் பிறகு சிம்பு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அதனால் சிம்புவின் பிறந்த நாளான இன்று அஸ்வத் மாரிமுத்து அவருடைய x வலைதள பக்கத்தில் சிம்புவுக்கு வாழ்த்துக்களையும் கூறி தன்னுடைய அடுத்த படத்திற்கான அப்டேட் ஒன்றையும் பதிவிட்டு இருக்கிறார். அரசன் திரைப்படத்தை சீக்கிரம் முடித்துவிட்டு வாருங்கள்.

உங்களுக்காக நான் காத்திருக்கிறேன். இந்தப் படம் ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். அதோடு படத்தின் தலைப்பு ‘I’ என்ற வார்த்தையில் தொடங்கும் என ஒரு ஹின்டையும் கொடுத்துள்ளார் அஸ்வத் மாரிமுத்து.

To Top