கடந்த சில வருடங்களில் வாட்டர் மிலன் ஸ்டார் என்று தன்னைத்தானே சொல்லிக் கொண்டு இணையவாசிகளிடம் பிரபலமானவர்தான் திவாகர். இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார்.
அடிப்படையில் இவர் ஒரு பிசியோதெரபிஸ்ட். தன்னை ஒரு மிகச் சிறந்த நடிகன் என தன்னை தானே சொல்லிக் கொள்வார் திவாகர். கர்ணன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிவாஜி எப்படி நடித்தாரோ அப்படி நடித்த காட்டுவேன் என சொல்லி நடித்தும் காட்டுவார்..
ஆனால் இவரை ட்ரோல் செய்பவர்கள் அதிகம்.. வேண்டுமென்று என்னை நெகட்டிவாக பேசுகிறார்கள் என்றெல்லாம் புலம்பி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார், இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய திவாகர் ‘நடிப்பு என்றால் சிவாஜிக்கு அடுத்தபடி கமல்ஹாசன். அவருக்கு பின் நான்தான். ஹீரோவாக நடிக்கும் எல்லா திறமையும் என்னிடம் இருக்கிறது..
ஆனால் என்னை பார்த்து பயந்து சூழ்ச்சிகள் செய்கிறார்கள்.. விஜய், சிவகார்த்திகேயனுக்கு இணையாக எனக்கும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.. மதுரையில் இருந்து வந்த விஜயகாந்துக்கு அடுத்து எந்த ஒரு நடிகரும் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. அந்த இடத்தை நான்தான் அனுப்பப் போகிறேன்.. அவரை போல நடிகர் சங்க தலைவராகவும் நான் ஆவேன்’ என்று நம்பிக்கையோடு பேசியிருக்கிறார்..





