jithan
jithan

விஜய் நடிப்பில் பல படங்கள் வெற்றி பெற்றாலும் ஒரு சில படங்களை பார்க்கும் பொழுது ஏன் இந்த படத்தில் அவர் நடித்தார்? எப்படி இந்த கதையை ஒப்புக்கொண்டார் என பார்ப்பவர்களுக்கே தோன்றும். அப்படி ஒரு சில படங்களை கூறலாம். அதில் ரசிகர்கள் மிகவும் வெறுத்த திரைப்படம் என்றால் புலி படத்தை சொல்லலாம். இருந்தாலும் விஜய் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்ற திரைப்படம் அழகிய தமிழ் மகன்.

அதற்கு முன்பு பிரியமுடன் படத்தில் நெகட்டிவ் ஷேடில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் அவருடைய அந்த வில்லத்தனம் பார்ப்பவர்களை மிகவும் பிரமிக்க வைத்தது. ஆனால் அழகிய தமிழ் மகன் படம் என்னுடைய படத்தை பார்த்துதான் எடுத்தார்கள் என நடிகர் ஜித்தன் ரமேஷ் ஒரு பேட்டியில் கூறி இருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

ஜித்தன் ரமேஷ் நடிப்பில் புலி வருது என்ற பெயரில் ஒரு படம் ரிலீஸ் ஆனது. ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. அதற்கு நல்ல ஒரு பப்ளிசிட்டி செய்திருந்தால் ஹிட் ஆகி இருக்கும் என்பது ஜித்தன் ரமேஷின் கருத்து. அந்த படத்தில் அவர் மிகவும் இஷ்டப்பட்டு நடித்தாராம். ஆனால் படம் ஏன் ஓடவில்லை என்று அவருக்கே தெரியவில்லை என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

ஆனால் அதே படத்தை தான் அழகிய தமிழ் மகன் என்ற பெயரில் விஜய் அண்ணா நடித்தார். யாரெல்லாம் படம் பார்க்கலையோ அழகிய தமிழ் மகன் மற்றும் புலி வருது என இந்த இரண்டு படங்களையும் பாருங்க. எது பெஸ்ட் என்று உங்களுக்கே தெரியும்.

ஏன்னா புலி வருது படம் தான் எனக்குத் தெரிஞ்சு பெஸ்ட்டா இருக்கும். அதற்கு காரணம் அந்த படத்தில் நிறைய ஆர்டிஸ்ட், நல்ல ஹியூமர், காமெடி என எல்லாமே அந்த படத்தில் சூப்பராக வந்திருக்கும் என ஜித்தன் ரமேஷ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.