சிறுவனாக இருக்கும்போது ரஜினி திரைப்படங்களை பார்த்து வளர்ந்தவர்தான் விஜய். அவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் ரஜினியை வைத்து நான் சிவப்பு மனிதன் படத்தை இயக்கிய போது ஷூட்டிங்கில் ரஜினியுடன் அவர் எடுத்துக் கொண்ட போட்டோ இப்போதும் கூகுளில் இருக்கிறது. அடிப்படையில் விஜயும் ஒரு ரஜினி ரசிகர்தான். துவக்கத்தில் அவர் நடிக்கும் படங்களின் பாடல் காட்சிகளில் ரஜினி போஸ்டர்கள் இடம் பெற்றிருக்கும்..
ஆனால் விஜய் வளர்ந்த பின் தன்னுடைய திரைப்படங்களில் ரஜினி பற்றி ரெஃப்ரன்ஸ் வராமல் பார்த்துக் கொண்டார். மேலும் ஒருகட்டத்தில் ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் விஜய் மாறினார்.. அதோடு ரஜினி படங்களை விட விஜயின் படங்கள் அதிக வசூலையும் பெற்றது..
இதையடுத்து, விஜய்தான் சூப்பர் ஸ்டார் என திரையுலகில் பலரும் பேச தொடங்கினார்கள். இது ரஜினியின் ஈகோவை தொட்டதா இல்லையா என தெரியவில்லை. ஜெயிலர் படை விழாவில் பேசிய ரஜினி ‘காக்கா கழுகு’ கதையை சொன்னார். அவர் காக்கா என சொன்னது விஜயைத்தான் என விஜய் ரசிகர்கள் புரிந்து கொண்டார்கள். அதையடுத்து இப்போது வரை அவர்கள் ரஜினிக்கு எதிராக ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் களமாடி வருகிறார்கள். ‘நான் விஜயை சொல்லவில்லை.. அவர் நான் பார்த்து வளர்ந்த பையன்’ என ரஜினி சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை..
அதேநேரம் ரஜினி தொடர்ந்து படங்களில் நடித்தும் கூட விஜய்யின் சம்பளத்தை அவரால் எட்ட முடியவில்லை. ஜெயிலர் 2 படத்தில் ரஜினி வாங்கியிருக்கும் சம்பளம் 150 கோடி என்கிறார்கள். ஆனால் ஜனநாயகன் படத்தில் நடித்த விஜய் 220 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார். அதோடு, சினிமாவை விட்டும் போய்விட்டார்.
இந்நிலையில், ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கவுள்ள புதிய படத்தில் ரஜினி 225 கோடி சம்பளம் பேசியிருக்கிறாராம். விஜயை விட அதிக சம்பளம் வாங்கியதாக வரலாறு இருக்க வேண்டும் என ரஜினி நினைத்தாரா என்பதுதான் தெரியவில்லை. இந்த படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் சார்பில் உதயநிதியின் மகன் இன்பநிதி தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.
