கிட்டத்தட்ட 23 வருடங்களுக்கு பிறகு மௌனம் பேசியதே திரைப்படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் மூலமாகத்தான் அமீர் முதன் முதலாக இயக்குனராக அறிமுகமானார். திரிஷாவுக்கு இதுதான் முதல் ரிலீஸ் படம். சூர்யா நடிப்பில் ஒரு காதல் காவியமாக இந்தப் படம் வெளியானது. படம் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று மௌனம் பேசியதே திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்திருக்கின்றனர். இந்தப் படத்தை பார்க்க அமீர் மற்றும் லைலா தியேட்டருக்கு வருகை தந்தனர். படத்தில் லைலா கேமியோ ரோலில் நடித்திருப்பார். கடைசி கிளைமாக்ஸில் சூர்யா தன்னந்தனியாக இருக்கும் போது நான் இருக்கிறேன் என காரில் கெத்தா வந்து இறங்குவார் லைலா.
அதை போல் ஒரு கெத்து என்டிரியைத்தான் இன்றும் கொடுத்திருக்கிறார். ஆம். மௌனம் பேசியதே ரீ ரிலீஸை பார்க்க காரில் படு ஸ்டைலாக வந்து இறங்கினார் லைலா. இன்னும் அதே மாதிரியான தோற்றத்துடன் இளமை மாறாத வகையில் ஸ்டைலாக வந்தார். அமீர் அருகே அமர்ந்து படத்தை பார்த்து ரசித்தார் லைலா. ஏற்கனவே நேற்று திரிஷா வீடியோ வாயிலாக அவருடைய சப்போர்ட்டை கொடுத்தார்.
சூர்யாவும் வீடியோ வாயிலாக அவருடைய மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார். ஆனால் இந்தப் படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க வேண்டும் என சூர்யா ஆசைப்பட்டார். அந்த ஆசை எப்போது நடக்கும் என தெரியவில்லை. சென்னை வந்ததும் கண்டிப்பாக இந்தப் படத்தை சூர்யா வந்து பார்ப்பார் என்றே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இதோ அந்த வீடியோ லிங்க்:https://www.instagram.com/reel/DUr_dYdDlx_/?igsh=MXVveXllajk5NXFyaA==
