ஜனநாயகன் படம் இதுவரை ரிலீஸாகாமல் இருப்பது அந்த படத்தை பார்க்க விரும்பிய விஜய் ரசிகர்களை அப்செட் ஆக்கியிருக்கிறது என்றால் ஒருபக்கம் இதன் காரணமாக ஜனநாயகன் படத்தின் வியாபாரமும் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே படத்தை வாங்கிய சில விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்ரிடம் பணத்தை திருப்பி கேட்டு வாங்கியிருக்கிறார்கள்.. மற்றவர்கள் பேசிய விலையை குறைத்துவிட்டார்கள்.
ஒருபக்கம், ஜனவரி 9 படம் ரிலீஸ் என்றால் பிப்ரவரில் இந்த படம் ஓடிடியில் வெளியாகவிருந்தது. ஆனால் படம் இதுவரை ரிலீஸ் ஆகாததால் படத்திற்கு என்ன விலை சொன்னார்களோ அதில் 50 சதவீதத்தைத்தான் கொடுக்க முடியும் என அமேசன் பிரைம் சொல்கிறதாம். ஒருபக்கம் KGF நடிகர் யாஷ் நடித்துள்ள Toxic படத்தையும் ஜனநாயகன் படத்தை தயாரித்துள்ள கேவிஎன் நிறுவனம்தான் தயாரித்திருக்கிறது. எனவே, அந்த படத்தை ஏப்ரல் 14 அல்லது மே 1ம் தேதி வெளியிடுங்கள் என விநியோகஸ்தர்கள் கேட்கிறார்களாம்.
ஜனநாயகன் படம் மே மாதம் வெளியாகவே அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இப்படி தாமதமாக ரிலீஸாவதால் விஜயின் சம்பளமே குறையும் என்கிறார்கள். அதாவது இந்த படத்திற்கு தனது மேனேஜர் ஜெகதீஸை இணை தயாரிப்பாளராக கொண்டு வந்த விஜய் சம்பளம் வாங்காமல் லாபத்தில் பங்கு என்கிற முறையில் 220 கோடி சம்பளம் பேசியிருக்கிறார் என்கிறார்கள். தற்போது அவரின் சம்பளம் 170 கோடியாக குறையும் என்கிறார்கள். ஒருவேளை விநியோகஸ்தர்கள் படத்தை மேலும் குறைவான விலைக்கு கேட்டால் விஜயின் சம்பளம் 145 கோடியாக குறைய வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்…





