பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பார்வதியை தவிற மற்ற போட்டியாளர்களை ஒரு சில நிகழ்ச்சிகளில் பார்க்க முடிகிறது. ஆனால் பார்வதி மட்டும் வெளியில் வருவதில்லை. அதற்கு காரணம் ரெட் கார்டு கொடுத்துவிட்டார்களே? எப்படி முகத்தை வெளிக்காட்டுவது என்ற எண்ணத்தில் இல்லை. மற்ற போட்டியாளர்களிடம் டச்சே வைத்துக் கொள்ளக் கூடாது என்ற காரணத்தினால்தான்.
இதை சமீபத்திய ஒரு பேட்டியில் பார்வதியே ‘ நான் இனிமே அவங்களோட தொடர்பே வச்சுக்கக் கூடாதுனு முடிவு பண்ணிட்டேன்’னு சொல்லியிருந்தார். பாரு வித் வைப் என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றில் பார்வதியும் கம்ருதீனும் பிக்பாஸில் நடந்த பல விஷயங்களை பற்றி விவாதித்திருந்தனர். அதில் அவர்கள் இருவரும் காதலர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை உறுதி செய்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் இவர்களை மக்கள் காஜி கப்பில் என்று கூறியதற்கு கம்ரூதீன் விளக்கம் கொடுத்திருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேலே போனால் அது லஸ்ட். அதுவே கீழே போனால் தெய்வீக காதல். நடுவில் இருந்தால் தான் ஆரோக்கியமாக இருக்கும். நான் அப்படித்தான் நியூட்ரலாக இருந்திருக்கிறேன். அதை ஏன் மக்கள் அவ்வாறு கூறினார்கள் என்று தெரியவில்லை என கம்ரூதீன் கேட்டிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் நாம கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு தான் நெருக்கமாக பழக ஆரம்பித்தோம். ஆனால் ஒரு ஜோடி வீட்டிற்குள் வந்த 5வது நாளிலேயே லவ் கண்டெண்ட் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். அவர்களை யாரும் ஒன்றும் சொல்லவில்லை என துஷார் மற்றும் அரோராவை பற்றி பேசியிருக்கிறார் கம்ரூதீன். மேலும் பாருவால்தான் உன் வாழ்க்கையே போச்சு.. வெளியில் போனாலும் அவளை கட் பண்ணிவிடு என்று திவ்யா கூறினார்.
திவ்யாவையே நான் கட் பண்ணிடுவேன்னு கம்ரூதீன் கூறியிருக்கிறார். மேலும் நமக்கு ரெட் கார்டு கொடுத்தார்கள். ஓகே. உனக்கு உன்னுடைய கண்ணை அடிச்சு வீங்க வைத்த சபரிக்கு எதிரா நீ ஏன் வுமன் கார்டு எடுக்கலனு பாருவை பார்த்து கம்ரூதீன் கேட்டார். அதற்கு பார்வதி, ‘அதுவரைக்கும் எனக்கு அப்படி ஒரு ஆப்ஷன் இருக்குனு தெரியாது. தெரிந்தாலும் கொடுத்திருக்க மாட்டேன். ஏனெனில் எவ்வளவு அடி வாங்கினாலும் இந்த பாரு மறுபடியும் எழுந்து வருவானு மக்கள் பார்க்க வேண்டும். அதனால்தான் அந்த வுமன் கார்டு என்ற விஷயமே எனக்குள்ள தோணல’னு பார்வதி கூறியிருக்கிறார்.
