
விஜய் டிவியில் ஆங்கராக இருந்து சினிமாவில் நடிக்க விரும்பி வாய்ப்புகளை தேடி பல சினிமா கம்பெனிகளிலும் ஏறி இறங்கியவர்தான் சிவகார்த்திகேயன். தனுஷ் நடித்த 3 படத்தில் அவரின் நண்பராக நடித்திருந்தார். மெரினா திரைப்படத்தில் முதன் முதலாக ஹீரோவாக நடிக்க தொடங்கினார். அதன்பின் எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்கள் சிவகார்த்திகேயனை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது..
தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் மாறியிருக்கிறார். ரஜினி, விஜய், அஜித், கமல் ஆகியோருக்கு அடுத்து அதிகமான அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் சிவகார்த்திகேயன் இருக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய அமரன் திரைப்படம் 300 கோடி வசூலை பெற்றது..
இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான Filmfare சார் விருது சிவகார்த்திகேயனுக்கு கொடுக்கப்பட்டது. அந்த மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் ’13 வருடங்களுக்கு முன்பு நான் தனுஷ் சாருடன் இந்த விருது விழாவிற்கு வந்தேன். அப்போது எனக்கு இரண்டாவது வரிசையில் இடம் கிடைத்தது. முதல் வரிசைக்கு வர 13 வருடங்கள் ஆகிவிட்டது. என்னை எப்படியெல்லாம் மிதிச்சாலும் அடிச்சி போட்டாலும் என் ரசிகர்கள் என்னை தூக்கி பிடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.. உங்களுக்கு பிடித்த சிவா அண்ணா இந்த Flimfare விருதுடன் நிற்கிறேன் என உருக்கமாக பேசியிருக்கிறார்..