
தமிழ் திரையுலகில் 50 வருடங்களுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 40 வருடங்களுக்கும் மேல் சூப்பர் ஸ்டார் என்கிற பட்டம் இவரிடமே இருக்கிறது. 75 வயதானாலும் இன்னும் ஆக்டிவாக சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். அனேகமாக இந்திய சினிமாவில் 75 வயதில் ஹீரோவாக நடிக்கும் ஒரே நடிகர் ரஜினி மட்டுமே.. இன்னமும் இவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இப்போதும் இவரின் படங்கள் பல நூறு கோடிகளை வசூல் செய்கிறது..
நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினி அடுத்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். கடந்த பல வருடங்களாகவே இளம் இயக்குனர்களுடன் கைகோர்த்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் ரஜினி. ஏனெனில் சீனியர் இயக்குனர்களுடன் கைகோர்பது அவருக்கு கை கொடுக்கவில்லை. சிபி சக்கரவர்த்தி படத்திற்கு பின் மீண்டும் நெல்சன் இயக்கத்தில் கமலுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. இந்த படம் தொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது..
ரஜினியின் 173வது படத்திலிருந்து சுந்தர்.சி விலகிய போது பல இளம் இயக்குனர்களை அழைத்து கதை கேட்டார் ரஜினி. அதில் ஆர்.ஜே பாலாஜியும் ஒருவர். இந்நிலையில் விழா ஒன்றில் பேசிய ஆர்.ஜே பாலாஜி ‘ சில மாதங்களுக்கு முன்பு ரஜினி சாரை சந்தித்தேன். அவர் எவ்வளவு பெரிய லெஜெண்ட்.. அடுத்த 5 வருடங்களுக்கு அவர் என்ன மாதிரியான படங்களை செய்யப் போகிறார்.. என்ன மாதிரியான இயக்குனர்களை தேர்ந்தெடுக்க போகிறார் என என்னிடம் எல்லாமும் சொன்னார்.. அதை கேட்பதற்கு ஆச்சர்யமாக இருந்தது..
75 வயதுள்ள அவர் 50 வருடங்களுக்கு முன்பு சினிமாவின் மீது எவ்வளவு ஆர்வமாக இருந்தாரோ இப்போதும் அப்படியேதான் இருக்கிறார்.. அது ரஜினி சாரால் மட்டுமே முடியும்’ என கூறியிருக்கிறார்.