
அஜித் நடிகராக மட்டுமில்லாமல் சமீப காலமாகவே ஒரு கார் ரேஸராகவும் மாறிவிட்டார். கடந்த 2 வருடங்களுக்கு மேல் அவர் பல நாடுகளில் நடக்கும் கார் ரேஸ்களில் கலந்து கொண்டு வருகிறார். இதற்காகவே ஒரு தனி டீமையும் அவர் உருவாக்கியிருக்கிறார்.
வழக்கமாக கார் ரேஸ் நடக்கும் ஸ்டேடியத்தில் கூட்டமே இருக்காதாம். ஆனால் அஜித் எப்போது கார் ரேஸில் கலந்து கொள்ள துவங்கினாரோ அப்போது முதலே ஸ்டேடியத்திற்கு நிறைய பேர் வருகிறார்களாம். குறிப்பாக, ரேஸ் நடக்கும் ஊரில் உள்ள தமிழர்கள் அஜித்தை பார்ப்பதற்காகவே வந்து விடுகிறார்களாம். மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் ஏற்பாட்டாளர்கள் தவிக்கிறார்களாம். ஒரு பக்கம் அஜித் துபாய் மற்றும் மலேசியாவில் இருந்தபோது அவரை பார்க்க சிம்பு, சிவகார்த்திகேயன், நயன்தாரா, விக்னேஷ் சிவன், யுவன் சங்கர் ராஜா, மாதவன் உள்ளிட்ட பல பிரபலங்களும் அங்கு நேரில் சென்றார்கள்..
அஜித்தை பார்ப்பதற்கென்றே ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதற்காக ஒன்றை செய்து வருகிறார் அஜித். ஒரு குறிப்பிட்ட குறைவான தொகையை செலுத்தி புக் செய்தால் அஜித்தின் ரேஸ் காரில் அவரின் அருகே அமர்ந்து இரண்டு ரவுண்ட் அடிக்கலாம். அதற்காக சமீபத்தில் 40 பேர் ஆன்லைனில் புக் செய்திருக்கிறார்கள். அதில் 20 பேரை அருகே அமர வைத்து காரை ஓட்டி காட்டியிருக்கிறார் அஜித். அதன்பின் சமீபத்தில் அவர் சென்னை வந்து விட்டாராம்..
அதேநேரம் மீதியிருக்கும் 20 பேர் ஏமாந்து போய்விடக்கூடாது என நினைத்த அஜித் இதற்காகவே மீண்டும் துபாய்க்கு கிளம்பி சென்றிருக்கிறாராம்.. ரசிகர்களுக்காக மீண்டும் துபாய் வந்த அஜித்தின் கடமையை பலரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்…