gaundamani-kasturi raja

1991-ல் வெளியான ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர் கஸ்தூரி ராஜா. இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, கிராமத்து பின்னணியிலான கதைகளை இயக்குவதில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தார். இவரது பெரும்பாலான படங்கள் கிராமிய கலாச்சாரம், குடும்ப உறவுகள் மற்றும் சமூகச் சிக்கல்களை மையமாகக் கொண்டிருந்தன. ‘ஆத்தா உன் கோயிலிலே’, ‘நாட்டுப்புறப் பாட்டு’, ‘எட்டுப்பட்டி ராசா’, ‘வீரம் விளைஞ்ச மண்ணு’ போன்ற படங்கள் இதற்கு உதாரணம்.

சமீபத்தில் கஸ்தூரிராஜா ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார் . அப்போது கவுண்டமணி குறித்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்தார். அவர் கூறியபோது, ஒரு முறை கவுண்டமணி இறந்துட்டாருனு ஒரு நியூஸ் வந்தது. கண்டிப்பா இது உண்மையாக இருக்கது என்று தோன்றியது.

உடனே போன் செய்தேன். போனை எடுத்த கவுண்டமணி நான் கவுண்டர்தான் பேசுறேனு சொன்னார். உங்களை பற்றி ஒரு தவறான செய்தி பரவுகிறதே என்றேன். உடனே அவர், எவனோ சொல்லிட்டான். ஊருல இருந்து வேற லாரில வந்துட்டு இருக்கானுங்க. இவனுங்களுக்கு இனி நான் சோறு வேற ஆக்கி போடனும் என்று கிண்டலடித்தார். அதோட வாயை பொத்திகிட்டேன். இதுக்கு மேல நாம எதாவது கேட்டால் கலாய்ப்பாருனு போனை வச்சிட்டேன் என்றார்.