
நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிஇருக்கிறது.
சங்கீதாவின் மனுவை ஏற்ற செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் வழக்கை குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றியது.. பிப்ரவரி 24 தாக்கல் செய்த மனு ஏப்ரல் 20-ம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது
. நடிகர் விஜய் – சங்கீதா நிச்சயதார்த்தம் லண்டனில் நடந்தது.
அதன்பின் 1999ம் வருடம் ஆகஸ்ட் 25ம் தேதி சென்னையில் நடந்தது. ஒருமகன். ஒரு மகள் உள்ள நிலையில் விஜய் சங்கீதா இருவரும் பிரிந்து வாழ்வதாக சொல்லப்பட்டது. கடந்த பல வருடங்களாகவே விஜய் சென்னை நீலங்கரையில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில்தான் அவரின் மனைவி சங்கீதா விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த விவாகரத்து வழக்கில் வருகிற ஏப்ரல் 20ம் தேதி விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது
இலங்கை தமிழ் பெண்ணான சங்கீதா விஜய காதலுக்கு மணந்து கொண்டார்.. அவரின் தந்தையை லண்டன் தொல்லியல் ஆவார். விஜயின் மனைவி விவாகரத்துக்கு விண்ணப்பித்திருப்பது அவரின் ரசிகர்களிடமும், தவெக தொண்டர்களிடமும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
