
நடிகர் விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்திருப்பது சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் குறிப்பாக விஜய் ஒரு நடிகையுன் தொடர்பில் இருந்தார் என அவரின் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கில் கூறியிருப்பது மேலும் பரபரப்பை கூட்டியிருக்கிறது.
ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருந்தர். 2021ம் வருடம் எனக்கு அது தெரியவந்தது. இதைபற்றி நான் கேட்டதும் உறவை விட்டுவிடுகிறேன் என கூறினார். ஆனால், அதை அவர் செய்யவில்லை. அதை தட்டி கேட்டதால் பொருளாதார ரீதியாக எனக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்தார் விஜய் . பொதுவெளியில் விஜய் அவமானம் அடைந்துவிடக் கூடாது என்பதற்காக அதை சுமூகமாக்கும் முயற்சிகளை மேற்கொண்டேன்.. ஆனால், விஜய் அதை மதிக்கவில்லை. எனவே, நீதிமன்றத்தை நாடியிருக்கிறேன்.
தேவைப்படும் பட்சத்தில் நடிகை மீது வழக்கு தொடர்வேன். நீதிமன்றத்தில் வழக்கு நடத்தினால் எனக்கும், விஜய்க்கும் சங்கடம் நேரும் என்பதால் சென்சிடிவான இந்த வழக்கு நீதிபதிகள் தனி அறையில் விசாரிக்க வேண்டும். விஜயுடன் தொடர்பில் இருக்கும் நடிகையை அவமதிக்கக் கூடாது என்பதால் அவரின் பெயரை தற்போது குறிப்பிடவில்லை..
தேவை ஏற்பட்டால் வழக்கில் இரண்டாவது பிரதிநிதியாக நடிகையை சேர்த்து வழக்கு தொடர்வேன். இப்போது விஜய் கள்ள உறவில்தான் இருக்கிறார்’ என புகார்களை அள்ளி வீசியிருக்கிறார் சங்கீதா..

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com
