vijay8

நடிகர் விஜய் 1999ம் வருடம் லண்டனை சேர்ந்த சங்கீதா என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கடந்த சில வருடங்களாகவே விஜய் சென்னை நீலாங்கரை வீட்டில் தனியாக வாழ்ந்து வருவதாகவும், அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் லண்டனில் வசிப்பதாகவும் செய்திகள் வெளியானது..

இந்நிலையில்தான் இந்த செய்தியை உறுதி செய்திருக்கிறார் விஜயின் மனைவி சங்கீதா.. சென்னை செங்கல்பட்டு உயர்நீதிமன்றத்தில் விஜயிடம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார் சங்கீதா. மேலும் விஜய்க்கு கடந்த பல வருடங்களாகவே ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறார்..

2021ம் வருடம்நடிகையுடன் அவருக்கு தொடர்பு இருந்தது எனக்கு தெரிய வந்தது.. இது தொடர்பாக பேசியதில் அந்த உறவை துண்டித்து விடுகிறேன் என விஜய் கூறினார்.. ஆனாலும் அந்த வாக்கை அவர் காப்பாற்றவில்லை.. தொடர்ந்து அந்த நடிகையுடன் தொடர்பில் இருந்தார்.. அது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது..

நான் இது தொடர்பாக பிரச்சனை செய்ததால் என்னை கொடுமைப்படுத்தினார்.. பொருளாதார ரீதியாக எனக்கு நெருக்கடி கொடுத்தார்.. என்னை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுத்தார்… அந்த நடிகை வெளிநாட்டில் விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.. இது எங்கள் குடும்பத்திற்கும், குழந்தைகளுக்கும் அவமானமாக இருந்தது.

சம்பந்தப்பட்ட நடிகையோடு விஜய் வெளிநாடுகளுக்கு சென்றார்.. அந்த புகைப்படங்களைத்தான் நடிகை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தார்.. இப்போது நடிகையின் பெயரை சொல்லவில்லை.. அதேநேரம் தேவை ஏற்பட்டால் நடிகையின் பெயரை சொல்லுவேன்.. அவர் மீது வழக்கு தொடர்வேன்’ எனவும் எச்சரித்திருக்கிறார்.