
நடிகை விஜயின் மனைவி சங்கீதா விஜய் நடிகையுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார் என்பது உள்ளிட்ட பல புகார்களை கூறியதோடு விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த செய்தி வெளியானது முதலே சமூக வலைத்தளங்களில் இந்த விஷயம் பேசுபொருளாக மாறியிருக்கிறது..
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு இருந்தது 2021ம் வருடம் எனக்கு தெரியவந்தது.. அதைப்பற்றி பேசியபோது அதை கைவிட்டு விடுகிறேன் என்று விஜய் சொன்னார்.. ஆனால் கொஞ்சமும் ஈவு இரக்கம் இல்லாமல் மனசாட்சி இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். அதைப்பற்றி கேட்டால் என்னை கொடுமைப்படுத்தினார்.. பொருளாதார ரீதியாக என்னை முடக்கினார்.. விஜய் தரப்பிலிருந்து அழுத்தம் வந்தால் அந்த நடிகையின் பெயரை வெளியிடுவேன். அவர் மீது வழக்கும் தொடர்வேன்.. அதோடு அந்த நடிகையுடன் விஜய்க்கு தொடர்புள்ள ஆதாரங்களை வெளியிடுவேன் எனவும் கூறி அதிர வைத்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ‘விஜய் முதலில் திரிஷாவை விட்டு வெளியே வரட்டும் என்று சொன்னது சர்ச்சையானது.. அவர் பேசியது தவறு என பலரும் எதிர்ப்பு தெரிவிக்க நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவிக்கும் அளவுக்கு சென்றது..

தற்போது விஜயின் மனைவி சங்கீதாவே இப்படி ஒரு புகாரை கூறியிருப்பதன் மூலம் சொன்னது உண்மைதான் என பலரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்
. இதையடுடுத்து பிரபல youtube சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் எக்ஸ் தளத்தில் ‘இதத்தானடா கொஞ்ச நாளைக்கு முன்னாடி நான் சொன்னேன்.. என்ன ரவுண்டு கட்டி அடிச்சி மன்னிப்பு கேட்க வச்சீங்களே’ என வடிவேலு மீம்ஸ் போட்டு பங்கம் பண்ணியிருக்கிறார்.

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com
