
தமிழ் சினிமாவில் பழைய படங்களை மீண்டும் திரையரங்குகளில் வெளியிடும் கலாச்சாரம் சமீபகாலமாக மிக வேகமாகவும், அதே சமயம் அதிகப் போட்டிகளுடனும் வெளிவருகிறது. அந்த வகையில், தளபதி விஜய்யின் மாஸ் ஹிட் படங்களில் ஒன்றான ‘தெறி’ திரைப்படம் நேற்று (பிப்ரவரி 27) திரையரங்குகளில் வெளியானது. இது குறித்த விரிவான பார்வையை கீழே காணலாம்.
‘தெறி’ ரீ-ரிலீஸ்: வசூல் நிலவரம் என்ன?
அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படமாகும். விஜய் நடித்த கில்லி, சச்சின் போன்ர படங்கள் ரீ ரிலிஸ்இல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த் நிலையில் தெறி இப்படத்தின் ரீ-ரிலீஸிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தபோதிலும், திரையரங்குகளில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சற்றே மந்தமாகவே உள்ளது.
முதல் நாள் வசூல்:
தற்போதைய தகவல்களின்படி, இப்படம் முதல் நாளில் சுமார் ₹40 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளதாகத் தெரிகிறது. விஜய்யின் மற்றொரு படமான ‘கில்லி’ ரீ-ரிலீஸ் செய்யப்பட்டபோது, அது பல கோடி ரூபாய்களை வசூலித்து புதிய சாதனை படைத்தது. அந்த வெற்றியுடன் ஒப்பிடுகையில், ‘தெறி’ படத்தின் முதல் நாள் வசூல் பலவீனமாகவே கருதப்படுகிறது.
ஏன் இந்த வரவேற்பு குறைவு? – சில முக்கிய காரணங்கள்
திரை விமர்சகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் இதற்குக் கீழ்க்கண்ட காரணங்களை முன்வைக்கின்றனர்:
தொடர்ந்து பல படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதால், ரசிகர்கள் அனைத்துப் படங்களுக்கும் திரையரங்கிற்கு வரத் தயங்குகின்றனர். இதனால் திரையரங்குகளில் பழைய படங்கள் மீதான ஆர்வம் குறைந்துள்ளது.

கில்லி திரைப்படம் 2004-ல் வெளியானது, அது ஒரு கல்ட் கிளாசிக். ஆனால், ‘தெறி’ திரைப்படம் 2016-ல் தான் வெளியானது. அந்தப் படம் இன்னும் ரசிகர்களின் நினைவில் பசுமையாக இருப்பதாலும், OTT தளங்களில் எப்போது வேண்டுமானாலும் பார்க்கக் கூடிய சூழல் இருப்பதாலும், மீண்டும் திரையரங்கிற்குச் சென்று பார்க்கும் ஆர்வம் பலருக்கும் இல்லாமல் இருக்கலாம்.
அதே நேரம் கில்லி’ ரீ-ரிலீஸின் போது இருந்த சமூக வலைதள கொண்டாட்டம் மற்றும் செய்திகள், தெறி படத்திற்குச் சரியான அளவில் மக்களைச் சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது.
இது தயாரிப்பாளர்களுக்குப் பாடமா?
இந்த வசூல் சரிவு, ரீ-ரிலீஸ் செய்வதைத் தேர்ந்தெடுக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு ஒரு முக்கியப் பாடமாக இருக்கலாம். இனி வரும் காலங்களில், எந்தப் படத்தை எப்போது வெளியிட வேண்டும் என்பதில் அதிக கவனமும், திட்டமிடலும் தேவை என்பதை இந்த நிலவரம் உணர்த்துகிறது.

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்
மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com
