vijay sangeetha

நடிகர் விஜயின் மனைவி சங்கீதா சில நாட்களுக்கு முன்பு விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.. விஜய் கடந்து 5 வருடங்களுக்கு மேல் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார் என்பதுதான் விவாகரத்துக்கான காரணம் என சங்கீதா சொன்னதுதான் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. ஏற்கனவே அந்த நடிகையுடன் விஜயை தொடர்பு படுத்தி செய்திகள் வெளியானாலும் சங்கீதா சொன்ன பிறகு அது உண்மைதானோ என்கிற சந்தேகம் பலருக்கும் எழுந்திருக்கிறது..

இந்த வழக்கு தொடர்பாக வருகிற ஏப்ரல் 20ம் தேதி விஜய் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். மேலும் இந்த வழக்கை தனி அறையில் நடத்த வேண்டும் எனவும் சங்கீதா கோரிக்கை வைத்திருக்கிறார்.
இதனையடுத்து விஜயை பலரும் விமர்சித்தாலும் விஜயின் தீவிர விசுவாசிகள் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்..

இன்னும் சொல்லப்போனால் விஜயின் தீவிர ரசிகைகளான சில பெண்கள் நாங்கள் விஜய் பக்கம் நிற்போம் என்கிறார்கள்.. அதிலும் சில ஆர்வக்கோளாறு ரசிகைகள் ‘விஜய்க்கு அக்காவா நிறைய பேர் இருக்காங்க. விஜய்க்கு தங்கச்சியா நிறைய பேர் இருக்காங்க.. விஜய்க்கு பொண்டாட்டியா நாங்க இருந்துட்டு போறோம்’ என சொல்லி அதிர வைத்தனர்.

அந்த வீடியோ வெளியாகி பலரின் கண்டத்திற்கும் உள்ளானது. ஆனால் சம்பந்தப்பட்ட விஜய் இதுவரை இதைப்பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை கரூர் விஷயத்திற்கு எப்படி அமைதியாக இருந்தாரோ, ஜனநாயகன் பிரச்சனையில் எப்படி அமைதியாக இருந்தாரோ, சிபிஐ விசாரணை தொடர்பாக எப்படி அமைதியாக இருந்தாரோ அதுபோலவே சங்கீதா அவர் மீது சொன்ன புகாருக்கும் அமைதியாகவே இருக்கிறார்..

இந்நிலையில்தான், விஜய்க்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.. ‘சங்கீதா வாகரத்து மனு தாக்கல் செய்துள்ள நிலையில் விஜயின் ரசிகர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் சங்கீதாவுக்கு எதிராக ஆணாதிக்க வன்முறை பதிவுகள் மற்றும் கேலிச்சித்திரங்களை பரப்பி வருகிறார்கள்.. பொதுவாழ்விற்கு வந்த பிறகும் விஜய் இந்த செயலை கண்டிக்காமல் அமைதியாக இருப்பது கண்டிக்கத்தக்கது.. இந்த மௌனம் வன்முறைக்கு வழங்கப்படும் மறைமுக ஒப்புதலாக அமையும்’ என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது