vijay trisha

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா சில நாட்களுக்கு முன்பு விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டதோடு விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக கூறி அதிர வைத்தார். நாங்கள் வீட்டில் இருக்கும்போதே அந்த நடிகையுடன் குடும்பம் நடத்துகிறார்.. என்னை கொடுமைப்படுத்தினார்.. விஜய் ஒரு சைக்கோ.. பொருளாதர ரீதியாக என்னை முடக்க பார்த்தார்.. இவ்வளவு வருடங்கள் குழந்தைகளுக்காக அமைதியாக இருந்தேன்.. இப்பொழுது வேறு வழியில்லை என்றெல்லாம் விவாகரத்து மனவில் குறிப்பிட்டிருந்தார்..

இதையடுத்து விஜயின் விர்ச்சுவல் வாரியர்ஸ் சங்கீதாவையே மிகவும் மோசமாவும், அசிங்கமாகவும் சமூக வலைதளங்களில் விமர்சித்தார்கள்.. மேலும், சங்கீதாவுக்கு பின்னால் திமுக இருக்கிறது.. திமுகதான் சங்கீதாவை இயக்குகிறது.. தேர்தல் வரும் போது இதை சொல்ல வேண்டிய அவசியம் என்ன?.. விஜய் அண்ணாவின் இமேஜை குறைக்க வேண்டும் என்பதற்காகவே திமுகவின் திட்டபடி சங்கீதா செயல்படுகிறார்’ என்றெல்லாம் சங்கீதாவின் மீது சேரை வீசினார்கள்..

ஆனால் நேற்று சென்னையில் நடந்த ஒரு திருமணத்திற்கு திரிஷாவுடன் விஜய் ஜோடியாக வந்தார்.. இதன் மூலம் சங்கீதா சொன்னது அனைத்தும் உண்மை என்பது நிரூபணமாகியிருக்கிறது.. ‘நீ என்ன சொல்வது?. நானே சொல்கிறேன்’ என்கிற மனநிலையில்தான் விஜய் திரிஷாவுடன் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். ஏனெனில், விஜய் எதையும், எப்போதும் வாய் திறந்து சொல்லமாட்டார்.. அடிப்படையில் நடிகர் என்பதால் எல்லாம் ஆக்‌ஷன்தான்…

இதைப்பார்க்கும் போது ஒன்று மட்டும்தான் புரிகிறது.. விஜய்க்கு எதைப்பற்றியும் கவலை இல்லை.. விவாகரத்து மனுவில் பதினோறு பக்கத்தில் சங்கீதா புலம்பியிருந்தது எல்லாமே நிஜம்.. விஜய்க்கு மனைவி, மகள், மகன் பற்றி எந்த கவலையும் இல்லை.. பெண்கள் அவரை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்கிற கவலை இல்லை.. சமுதாயம் தன்னை எப்படி பார்க்கிறது என்கிற பயம் இல்லை..

நாம் ஆம்பளை.. நாம் ஒரு பெரிய நடிகர்.. நமக்காக உயிரை கொடுக்க, நமக்காக ஆதரவாக நிற்க பலரும் இருக்கிறார்கள்.. நாம் என்ன தவறு செய்தாலும் அவர்கள் முட்டு கொடுப்பார்கள்.. நமக்கு ஆதரவாக நிற்பார்கள் என்று நினைக்கிறார் என்பதைத்தான் அவரின் இந்த செயல் நிரூபிக்கிறது’ என சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.