படுத்து கூட சம்பாதிக்கலாம்!. நடிகைக்கு ரஜினி சொன்ன அட்வைஸ்!…

Published on: March 11, 2026
sona

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் சோனா. பெரும்பாலும் இவருக்கு கவர்ச்சி கதாபாத்திரம்தான் கிடைத்தது. ஒரு கட்டத்தில் கவர்ச்சி கலந்த காமெடி வேடங்களிலும் நடிக்க துவங்கினார். ரஜினி நடித்த குசேலன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்திருப்பார். அவ்வப்போது பேட்டி கொடுக்கும் சோனா தனது சினிமாவில் தான் சந்தித்த கசப்பான அனுபவங்களை பற்றி தொடர்ந்து பேசி வருகிறார்.

நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் எப்படி நடிப்பது? யாரிடம் சென்று வாய்ப்பு கேட்பது? காஸ்டிங் கவுச் பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது? என எதுவுமே எனக்கு தெரியாது.. 2 நாட்கள் ஷூட்டிங் செல்வேன்.. அதன்பின் ஏதாவது பிரச்சனை வரும்.. உடனே ஐயா என்னை விட்டு விடுங்கள் என சொல்லிவிட்டு அங்கிருந்து வந்து வேன்.. பல பிரச்சினைகளை எப்படி எதிர்கொண்டு சமாளிப்பது என்பது எனக்கு தெரியவில்லை..

குசேலன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது ஒரு பிரபலமான பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் என் போட்டோ வந்தது.. அதை பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டேன்.. ஆனால் அந்த போட்டோவுக்கு கீழே சினிமாவில் படுத்துக் கூட சம்பாதிக்கலாம் என கேப்ஷன் போட்டிருந்தார்கள்.. அதை பார்த்தது மனமடைந்துவிட்டேன்..

நான் சோகமாக உட்கார்ந்து கொண்டிருப்பதை பார்த்த ரஜினி சார் ‘இதற்கெல்லாம் ஏன் நீ பீல் பண்ணுகிறாய்? நீ படுத்திருப்பதே பத்திரிக்கையில் செய்தியாக வருகிறது.. அப்படி என்றால் நீ எவ்வளவு பெரிய பிரபலம்?.. அதற்காக நீ பெருமைப்படு.. அந்த போட்டோவுக்கு எப்படி கேப்ஷன் போடுவது என தெரியாமல் இப்படி தவறாக போட்டிருக்கிறார்கள்’ என்றார்.. அவர் சொன்னது சரிதான் என தோன்றியது. அதன்பின் என் அணுகுமுறையை மாறிவிட்டது’ என்று சோனா சொல்லியிருக்கிறார்..