latest news
ஜனநாயகன் அக்ரிமெண்ட் கேன்சல்!.. தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி கொடுத்த அமேசான்!…
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியிருக்கும் திரைப்படம் ஜனநாயகன். தெலுங்கில் பாலையா நடித்து வெற்றி பெற்ற பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்காக படம் உருவாக்கப்பட்டது.. அதேநேரம் விஜய்க்கும் தமிழுக்கும் ஏற்றார் போல் பல மாற்றங்களை ஹெச்.வினோத் செய்திருந்தார்.
கடந்த ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை. நீதிமன்றத்திற்கு சென்று ஒரு மாத காலமாகியும் படம் ரிலீஸாகவில்லை. எனவே கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி தணிக்கை வாரியத்திற்கு எதிரான வழக்கை தயாரிப்பாளர் வாபஸ் பெற்றதோடு, மறு தணிக்கைக்கும் விண்ணப்பித்தார்.. ஆனால் 40 நாட்கள் ஆகியும் இதுவரை படம் மறு தணிக்கை செய்யப்படவில்லை..
இந்நிலையில், ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியிருந்த அமேசான் பிரைம் நிறுவனம் ஒப்பந்தத்தை கேன்சல் செய்திருக்கிறது. ஏனெனில் படம் தியேட்டரில் வெளியாகி மூன்று வாரங்களில் ஓடிடியில் வெளியாக வேண்டும் என்பதுதான் விதிமுறை.. ஆனால் ரிலீஸ் தேதி அறிவித்து இரண்டு மாதங்களாகியும் இதுவரை படமே தியேட்டரில் வெளியாகவில்லை என்பதால் அமேசான் நிறுவனம் தயாரிப்பாளரிடம் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்கிறது.. ஜனநாயகன் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் 120 கோடிக்கு மேல் வாங்கியதாக சொல்லப்படுகிறது.
அதேநேரம் ஜனநாயகன் படத்திற்கு மீண்டும் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டபின் படத்தின் ஓடிடி உரிமை தொடர்பான வியாபாரத்தை அமேசான் பிரைம் மீண்டும் துவங்கும் என சொல்லப்படுகிறது.
