Connect with us

கர்ப்பமானால் சினிமாவில் நடிப்பதை நிறுத்துவேன்!.. திரிஷா கொடுத்த பேட்டி…

trisha vijay

latest news

கர்ப்பமானால் சினிமாவில் நடிப்பதை நிறுத்துவேன்!.. திரிஷா கொடுத்த பேட்டி…

தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேல் நடித்து வருபவர் திரிஷா. மிஸ் மெட்ராஸ் அழகி பட்டம் பெற்றவர். துவக்கத்தில் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்றாலும் ஒரு கட்டத்தில் கில்லி போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். தமிழ் மட்டுமின்றி நிறைய தெலுங்கு படங்களிலும் திரிஷா நடித்தார். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, விஷால், ஜெயம் ரவி உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்..

ஒருபகக்ம், கடந்த சில வருடங்களாகவே திரிஷா விஜயுடன் நெருக்கமாக இருக்கிறார்.. அவ்வப்போது விஜய்யுடன் தனிமையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார். இதை தொடர்ந்து விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியிருப்பதாக சொல்லப்படுகிறது.. அதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் திரிஷாவை அழைத்துக்கொண்டு ஒரு திருமண விழாவிற்கு சென்றார் விஜய்..

இந்நிலையில், திரிஷா பல வருடங்களுக்கு முன்பு கொடுத்த ஒரு பேட்டி வைரலாகி வருகிறது. ‘நான் திருமணம் செய்துகொள்ள விரும்பிய அந்த நபர் என்னிடம் சினிமாவில் நடிப்பதை விட்டு விடும்படி சொன்னார்.. நான் நடிப்பதை கைவிடுவதற்கு பதிலாக என் திருமணத்தை கைவிட்டேன்.. அதனால்தான் அந்த திருமணம் நின்று போனது.. நான் கர்ப்பமானால் மட்டுமே சினிமாவில் நடிப்பதை நிறுத்துவேன்’ என்று அப்போது திரிஷா கூறியிருந்தார்.

திரிஷாவுக்கும் வருண் மணியன் என்கிற தொழில் அதிபருக்கும் இடையே 2015ம் வருடம் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், சில மாதங்களில் அந்த திருமணம் நின்று போனது குறிப்பிடத்தக்கது..

To Top