Connect with us

மேடையில் மட்டும்தான் வசனம் … அப்போ கேப்டன்…இப்போ விஜய்? – மீண்டும் ட்ரோல் ஆகும் வடிவேலு பேச்சு

vadivelu talk about vijay

latest news

மேடையில் மட்டும்தான் வசனம் … அப்போ கேப்டன்…இப்போ விஜய்? – மீண்டும் ட்ரோல் ஆகும் வடிவேலு பேச்சு

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் காமெடியில் கலக்கியவர் வடிவேலு.ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய் அஜீத் என அனைத்த் நடிகர்களின் படங்களிலும் தவிர்க்க முடியாத நடிகராக இருந்தார். இன்றைய இளைஞர்களின் மீம்ஸ்களின் நாயகனாகவும் வடிவேலு இருந்து வருகிறார்.

கடந்த 2011ம் ஆண்டு தேர்தலின்போது விஜயகாந்துடன் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனையின் காரணமாக திமுகவுடன் சேர்ந்து மிகவும் தரக்குறைவாக பேசினார் வடிவேலு. அந்த தேர்தலில் விஜய்காந்த் வெற்றி பெற்று எதிர்கட்சி தலைவரானார். வடிவேலு சினிமாவை விட்டே ஒதுக்கி வைக்கப்பட்டார். அதற்கு பின்பு அவரால பழைய வெற்றியை கொடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. சமீபத்தில் வந்த மாரீசன் படம் தோல்வி அடைந்தாலும் வடிவேலு நடிப்பு பேசப்பட்டது. தற்போது மீண்டும் அரசியல் கூட்டங்களில் பேச துவங்கியிருக்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது, எதற்கு எடுத்தாலும் திமுகவை அழிக்கனும்,. திமுகவை அழிக்கனும்னு சொல்லுறது. டேய் அந்த மாதிரி சொன்னவன எல்லாம் காணும்டா சண்டாளங்களா. நானும் பார்த்துட்டுதான் இருக்கேன். எவன் எவன் சொல்லுறானோ அம்புட்டு பெருமாள காணும். எங்க இருக்கங்கனே தெரியல. ரொம்ப விலாவரியா பேசுனா சிக்கல் அயுடும். எப்படிடா திமுகவை அழிக்க முடியும். அது தஞ்சாவூர் கோபுரம் மாதிரி நிக்கிது.என்ன செய்தாலும் திமுகவை அழிக்க முடியாது. வசனம் எல்லாம் மேடையில்தான் பேசமுடியும். ஆனால் செயலில் திமுக மட்டுமே செய்து காட்டும் என்று பேசினார்.

வடிவேலுவின் பேச்சில் சில இடங்களில் நேரடியாக பேசாவிட்டாலும் மறைமுகமாக விஜயை மனதில் வைத்தே பேசினார் என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

To Top