latest news
பேய் ஹிட்டான தாய் கிழவி: குடும்பத்துடன் சிங்கபூர் பறந்த சிவகார்த்திகேயன்
ராதிகா சரத்குமார் நடிப்பில் கடந்த பிப் 27 அன்று வெளியான படம் தாய் கிழவி. சிவகுமார் முருகேசன் என்ற புதிய இயக்குனர் இயக்கி இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்சன்ஸ் வெளியிட்டிருந்தது. முதல் டீஸர் வந்த போதே இப்படத்தின் மீதான் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அது படம் வெளியானதும் பொய் ஆகவில்லை. தமிழகமெங்கும் பெரிய வெற்றியை பெற்றது. தற்போது பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை ரூ. 60 கோடி வரை வசூல் செய்துள்ளது இந்த படம்.

இந்த நிலையில் படத்தின் வெற்றி சிவகர்த்திகேயனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தண்டஹு மனைவி குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கு குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோக்களை பார்த்த பலரும் இந்த வெற்றிக்கு தகுதியான ஓய்வு இது என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

