latest news
மனைவியை வெறுப்பேற்ற திரிஷாவுடன் சென்றதற்கு சமம் இது – விஜய் குறித்து பிரபல பத்திரிக்கையாளர் கருத்து
தமிழக தேர்தல் களம் பரபரப்பை எட்டியுள்ளது.திமுகவை பொறுத்தமட்டில் கூட்டணி கட்சிகளை இறுதி செய்துவிட்டது. அதே வேலை அதிமுகவில் இன்னும் இறுதி முடிவு எட்டவில்லை என்றே தெரிகிறது.
இந்த தேர்தலில் அனைவரும் எதிர்பார்க்கபட்ட கட்சி என்றால் அது தவெக தான். விஜயின் அரசியல் வருகை மற்றகட்சிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றே கூறப்பட்டது. அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் இளவட்டங்கள் கூட்டம் படையெடுத்தன. ஆனால் தற்போது சூழ்நிலை மாறியுள்ளது.
விஜய் கரூர் கூட்டத்தில் 41 பேர் பலியான் சம்பவம் விஜய் மீது ஒரு கோபத்தை ஏற்படுத்தியது. பொதுமக்கள் இறந்ததற்கு முன்று நாட்கள் கழித்தே வீடியோவில் பேசினார். ஆனாலும் திமுகதான் காரணம் என சப்பை கட்டு கட்டினாரே தவிர தான் கூட்டத்திற்கு தாமதாக வந்ததும் ஒரு காரணம் என்று வருத்தம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் விஜய் மனைவி சங்கீதாவின் விவாகத்து வழக்கு அவரது அரசியல் இமேஜை சற்று அசைத்தே பார்த்தது. அந்த சம்பவம் அடங்கும் முன்பே திரிஷாவுடன் ஒரு திருமண விழாவிற்கு விஜய் சென்றார். இது அவரது கட்சிகாரர்கள் மட்டுமலாமல் பொதும்க்களையும் வெறுப்படைய செய்தது. ஒழுக்கமில்லத தலைவனை எப்படி ஏற்பது என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தன.
இந்த சூழ்நிலையில் தற்போது தவெக பாகஜ கூட்டணிக்குள் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து கட்சி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனையும் நடைபெற்றது. தனித்து நின்றால் இன்றைய சூநிலையில் ஜெயிக்க முடியாது என்பதை உணர்ந்த விஜய் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் வலைபேச்சு பிஸ்மி இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்தினை தெரிவித்துள்ளார். அதில், திமுவை வீழ்த்த பாஜகவுடன் கூட்டணி வைப்பது மனைவியை வெறுப்பேற்ற திருமண நிகழ்ச்சிக்கு திரிஷாவை அழைத்து சென்றததற்கு சமம் புரிந்தால் சரி என்று கூறியுள்ளார்.

ஆரம்பம் முதலே விஜய்க்கு முட்டு கொடுத்து வந்த பிஸ்மியின் இந்த பதிவு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
