latest news
இந்த சீனை ஏன்டா டெலிட் பண்ணீங்க!.. தாய் கிழவி டெலிட்டேட் சீன் செம Fun!…
சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா முக்கிய வேடத்தில் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் தாய் கிழவி. இந்த படத்தை சிவகார்த்திகேயன் தனது எஸ்.கே புரடெக்ஷன் நிறுவனம் சார்பில் வெளியிட்டிருந்தார். இந்த படத்தில் ராதிகாவின் கெட்டப் பாராட்டை பெற்றது. மேக்கப் மன்னன் உலக நாயகன் கமலஹாசனே ராதிகாவின் மேக்கப்பை பாராட்டியிருந்தார். அதோடு படத்தை பார்த்து ராதிகா சிவஜ்குமார் முருகேசன், சிவகார்த்திகேயன் என அனைவரையும் அவர் பாராட்டிய வீடியோக்களும் வெளியானது..
தாய் கிழவி படத்தில் சமூகத்துக்கு தேவையான நல்ல கருத்துக்களையும் சொல்லியிருப்பதால் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.. விரைவில் இப்படம் 100 கோடி வசூலை பெறவும் வாய்ப்புண்டு. இந்நிலையில்தான், இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட ஒரு காட்சி தற்போது வெளியாகியிருக்கிறது.
தீவிர கமல் ரசிகரான சிங்கம் புலி மருத்துவமனையில் ஒரு அறையின் வாசலில் வெளியே நின்று அழுது கொண்டிருக்க அங்கு வரும் அவரின் ஒரு சகோதரர்களும் அழுது கொண்டே ராதிகாதான் இறந்துவிட்டார் என நினைத்து அவர்களும் சேர்ந்து அழ சிங்கம் புலியோ ‘பிக்பாஸ்ல கமலை தூக்கிட்டு விஜய் சேதுபதியை போட்டு விட்டார்கள்.. கமல் அளவுக்கு இந்த பைய பண்ணுவானா?’ என சொல்ல கடுப்பான அவர்கள் அவரை போட்டு அடிக்கிறார்கள்.
செம ஜாலியாக இருக்கும் இந்த காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது.
விஜய் சேதுபதியை மட்டம் தட்டுவது போல் இருப்பதால் இந்த காட்சி நீக்கப்பட்டிருக்கலம் எனத்தெரிகிறது. ‘இந்த காட்சியை ஏன்டா டெலிட் பண்ணீங்க?’ என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்..
இதை ஏன்டா டெலீட் பண்ணீங்க?🤣🤣🤣
— Dr.Aravind Raja (@AravindRajaOff) March 14, 2026
pic.twitter.com/mXP1dCv0hO
