latest news
எனக்கு ஒரு அட்வைஸ் சொன்னார்!. அதனாலதான் அவர் கேப்டன்!.. ரவி மோகன் ஃபீலிங்!…
தமிழ் சினிமாவில் பலரும் கொண்டாடிய ஒரு நடிகர் விஜயகாந்த். அவர் சிறந்த நடிகர் என்பதற்காக இல்லை.. சிறந்த மனிதர் என்பதற்காக.. மனிதாபிமானமிக்க, மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்ட, எளிமையான மனிதர்தான் விஜயகாந்த். அதன்பின்னர்தான் அவர் நடிகர்.. எந்த தலைக்கணமும் இல்லாமல் எல்லோருடனும் எளிமையாக பழகியவர்தான் விஜயகாந்த். அதனால்தான் அவரை எல்லோருக்கும் பிடித்திருந்தது. மற்றவர்களுக்கு தன்னால் என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்தார் விஜயகாந்த்.. பல நடிகர்களை, இயக்குனர்களை, தயாரிப்பாளர்களை உருவாக்கினார்.. அவரால் சினிமாவில் வளர்ந்தவர்கள் பலர்..
சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி ஊடகம் ஒன்றில் பேசியபோது விஜயகாந்தை பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொண்டார். விஜயகாந்த் சார ஏன் கேப்டன்னு சொல்றம்னா ஒரு கேப்டன்தான் ஜாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம் எதுவும் பார்க்காமல் இருப்பார்.. அந்த மாதிரிதான் எங்க கேப்டன்.. அவர் மேல் எனக்கு பெரிய மரியாதை, பாசம் அன்பு எல்லாமே இருக்கு.. ஒருநாள் அவருடைய ஷூட்டிங், என்னோட படத்தோட ஷூட்டிங் ஒரே இடத்துல நடந்தது..
அவரை பார்க்கணும்னு போனேன்.. ‘வா ரவின்னு சாதாரணமா ஒரு நண்பன் எப்படி பேசுவாரே அந்த மாதிரி எனக்கு சேர் போட்டு பக்கத்துல உட்காரவச்சி என் படங்கள் பத்தி பெருமையா பேசினார்.. பீச்சுக்கு போய் நல்லா கத்து.. குரல் நல்லா வரும்னு சொன்னார்.. ஒரு வாரம் போய் கத்தினேன்.. விஜயகாந்த் சார் மாதிரி நமக்கும் அவருடைய நல்ல குணம் வரணும்’ என பேசியிருக்கிறார்..
