">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
எனது பத்தாண்டு இசைப்பயணம்: பிரபல இசையமைப்பாளரின் டுவிட்
இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய ’வெயில்’ என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிவி பிரகாஷ், கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் பல வெற்றிப் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இதனை அவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்
இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய ’வெயில்’ என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிவி பிரகாஷ், கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் பல வெற்றிப் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இதனை அவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்
கடந்த 2010ஆம் ஆண்டு ’ஆயிரத்தில் ஒருவன்’ என்ற திரைப்படத்தில் இசையமைதத்தாகவும், அந்த படத்திற்கு பின்னர் வரிசையாக பல படங்களில் இசையமைத்து 2019 ஆம் ஆண்டில் அசுரன் படத்துடன் தனது இசைப் பயணம் இந்த 10 ஆண்டுகளில் வெற்றிகரமாக முடித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் 2020 ஆம் ஆண்டில் இருந்து சூரரைப்போற்று என்ற படத்தில் இருந்து மீண்டும் தனது பணியை தொடங்க உள்ளதாகவும் அடுத்து வரும் 10 ஆண்டுகளும் தனக்கு வெற்றிகரமான ஆண்டாக இருக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் 2010 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் அவர் பல திரைப்படங்களில் நடித்து வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் என்றும் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டு குதிரைகளில் ஒரே சமயத்தில் சவாரி செய்து வரும் ஜிவி பிரகாஷ் இரண்டு துறைகளிலும் வெற்றி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
What a decade this has been … started with 2010 Jan #aayirathiloruvan and ended with 2019 #asuran … ❤️ #aayirathiloruvan – #asuran
— G.V.Prakash Kumar (@gvprakash) December 26, 2019