Cook with comali: விஜய் தொலைக்காட்சியின் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி அடுத்த சீசன் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு தற்போது நான்காவது ஒரு பெண் நடுவர் அறிமுகம் ஆகியிருப்பது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரிய அளவில் ஆதரவு பெற்றது என்றால் அது கண்டிப்பாக குக் வித் கோமாளி தான் என கூறலாம். சமையல் நிகழ்ச்சியில் காமெடியை இணைத்து ரசிகர்களின் மன அழுத்தத்தினை சரி செய்யும் விதமாக இந்த நிகழ்ச்சி தொடங்கியது.
முதல் நான்கு சீசன்கள் பரபரப்பாக சென்றது. அதிலும் கோமாளிகள் மற்றும் நடுவர் வெங்கடேஷ் பட் இடையே இருந்த காமெடி ரசிகர்களிடம் அதிக லைக் குவித்ததும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில் ஐந்தாவது சீசனில் இருந்து இந்நிகழ்ச்சிக்கு பெரிய பிரச்சினை தொடங்கியது.
முதலில் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பு குழு வெளியேறியது. அதைத்தொடர்ந்து நடுவரான வெங்கடேஷ் பட்டும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து அந்த ஐந்தாவது சீசனில் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டேக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இதனால் அந்த சீசன் தொகுப்பாளினி மணிமேகலை கடுப்பாகி வீடியோ வெளியிட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து கடந்த சீசனில் நடுவர் ரங்கராஜ் மீது அவரின் இரண்டாவது மனைவி ஜாய் தொடுத்த வழக்கு நிகழ்ச்சியின் மீதான ஆர்வத்தை குறைத்து அதிருப்தியை தான் அதிகப்படுத்தியது.
இதைத் தொடர்ந்து தற்போது இந்த நிகழ்ச்சியில் ஜோடிகளாக போட்டியாளர்களை களம் இறக்க முடிவெடுத்து இருக்கின்றனர். இதுவும் பழைய தயாரிப்பு நிறுவனமான மீடியா மேசன் நிறுவனம் தற்போது நடத்தும் கிச்சன் ஜோடி காப்பி என மீண்டும் பலரும் கலாய்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் இருக்கும் நெகட்டிவ் விமர்சனத்தை துடைத்து மீண்டும் பரபரப்பாகபெண் நடுவராக நடிகை ரோஜாவை களம் இறக்கி இருக்கின்றனர். நிகழ்ச்சிக்கு ஏற்கனவே மூன்று நடுவர்கள் இருக்கும் நிலையில் நான்காவதாக இவரும் இறங்கி தற்போது போட்டியாளரை விட நடுவர்கள் அதிகமாக இருப்பர்கள் போலயே என மீண்டும் பிரச்சினைகளில் தான் குக் வித் கோமாளி சிக்குகிறது.





