---Advertisement---

50-ஐ 500 ஆக்கிடாதீங்க.. உங்களுக்கென்ன ஜாலியா இருக்கீங்க – பிக்பாஸ் ஜூலி ஆவேசம்!

Published on: March 25, 2026
vijay- julie
---Advertisement---

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறியப்பட்டவர் ஜூலி. பிக்பஸ் நிக்ழ்ச்சி அவரை எல்லோரிடமும் கொண்டு சேர்த்தது. எப்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக் இருக்கும் ஜூலி சமீபகலமாக தெவெக தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன் தஞ்சையில் நடந்த கூட்டத்தில் கலந்துகொள்ள விஜய் வந்தபோது அவரை காண வந்த வாலிபர் விபத்தில் சிக்கி மருத்துவமமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முந்தினம் உயிரிழ்ந்தார். இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு ஜூலி தனது காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

50-50 ஆகவே இருக்கட்டும். 500 ஆக்கிடாதீங்கனு சொன்னதுக்கு, இந்த வல்கர் வாரியர்ஸ்பொங்கு பொங்குனு பொங்கிட்டு இருந்தாங்க.
அண்ணனைப் பார்க்கலாம்னு ஆசையா வந்த பையன் இன்று இறந்துவிட்டான். இதில் யாருக்கு நஷ்டம்? பெற்றவங்களுக்குத்தான் நஷ்டம். உங்களுக்கு என்ன, ஜாலியா அடுத்தடுத்த நிகழ்வுகளுக்குப் போய்ட்டு இருக்கீங்க. திரும்பவும் சொல்றேன், 50-ஐ 500 ஆக்கிடாதீங்க என்று கடுமையாக விளாசியுள்ளார் ஜூலி.